ஏப்ரல் 16, 1853
பம்பாய்க்கும் தானேவிற்கும் இடையே இன்று முதல் ரயில் ஓடியது. இதில் 400 பயணிகள் பிரயாணம் செய்தனர். அவர்கள் அனைவருமே விழாவிற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள்.
ஏப்ரல் 16, 1888
நீர்ம ஆக்சிஜனை உருவாக்கிப் புகழ்பெற்ற போலந்து அறிவியலாளர் சர் சிக்மண்ட் பிளாரன்டரி வான் ரோபில்வெஸ்கி இன்று தனது ஆய்வுக்கூடத்தில் இருக்கும்போது மண்ணெண்ணெய் விளக்கில் இடறி விழுந்து தீப்பிடித்து இறந்து போனார்.
ஏப்ரல் 16, 1889
மாபெரும் நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் லண்டனில் இன்று தான் பிறந்தார்.
ஏப்ரல் 16. 1958
டி என் ஏ (D.N.A) கட்டமைப்பு பற்றி விவரித்து புகழ்பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி ரோசலின் எல்சி பிராங்க்ளின் என்னும் பெண் 38 வயதில் காலமானார்.

Comments
Post a Comment
Your feedback