ஏப்ரல் 23,1640
சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்ட நாள். பிரான்சிஸ் டே என்பவர் கிழக்கிந்திய கம்பெனி வாணிபம் செய்வதற்காக 10 சதுர கிலோமீட்டர் பரப்புடைய நிலத்தை கடற்கரையை ஒட்டி வாங்கினார். அவரும் கிழக்கு இந்திய கம்பெனி உரிமையாளர் ஆண்ட்ரூ ஜோகன் என்பவரும் இந்த இடத்தில் ஒரு பண்டகசாலை கட்டி முடித்தனர். கட்டி முடித்த நாள் செயிண்ட் ஜார்ஜ் தினம். எனவே இந்த இடத்திற்கு செயிண்ட் ஜார்ஜ் கோட்டை என்று பெயர் சூட்டினார்கள்.
ஏப்ரல் 23, 1826
கிறித்துவக் கம்பர் என்ற அடைமொழியோடு குறிப்பிடப்படும் எச். ஏ. கிருஷ்ணபிள்ளை பிறந்த நாள்.
ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் புரூக் காலமானார்.
ஏப்ரல் 23, 1916
பாலகங்காதர திலகர் ஹோம் ரூல் இயக்கத்தை துவக்கினார்.
ஏப்ரல் 23, 1938
தென்இந்தியாவின் நைட்டிங்கேல், ஜானகியம்மா என்றெல்லாம் அழைக்கப்படும் பாடகி S.P. ஜானகி ஆந்திராவில் இன்று பிறந்தார். 1957 ஆம் ஆண்டு முதல் பாடிக்கொண்டிருக்கும் இவர் இன்றும் தன்னுடைய குரலின் இளமையைப் பராமரித்து வருவது நினைத்துப் பார்க்க முடியாத சாதனை. சிங்கார வேலனே தேவா என்று இவர் பாடிய பாடல் ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தையது என்பது வியப்பைத் தரும். பல மொழிகளில் நன்கு பேசவும் உரையாடவும் திறன் பெற்ற இவர் 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
ஏப்ரல் 23, 1992
பதேர் பாஞ்சாலி உள்ளிட்ட உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களை உருவாக்கிய இந்தியாவின் சிறந்த திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான சத்யஜித் ரே கல்கத்தாவில் காலமானார்.
ஏப்ரல் 23, 2007
சோவியத் யூனியன் என்ற ஒருங்கிணைந்த நாட்டிலிருந்து பிரிந்த பிறகு ரஷ்யாவின் முதல் ஜனாதிபதியாக இருந்தவர் போரிஸ் யெல்ட்சின். inru அவர் மறைந்த நாள்.
Comments
Post a Comment
Your feedback