ஏப்ரல் 25, 1792
கில்லட்டின் என்னும் தலை வெட்டும் இயந்திரம் மூலமாக முதல் மரண தண்டனை இன்று பிரான்சில் நிறைவேற்றப்பட்டது. முதலில் இந்த இயந்திரத்தின் பெயர் லூயிசன் என்றுதான் இருந்தது. டாக்டர் லூயிஸ் என்பவர் இதை வடிவமைத்ததால் இந்தப் பெயரால் குறிப்பிடப்பட்டது. வலி தெரியாமல் துரிதமாக மரணம் ஏற்படுத்தும் எந்திரத்தைப் பயன்படுத்துவது பற்றி டாக்டர் கில்லெட்டின் வற்புறுத்தி வந்தார். பின்னர் அவர் பெயரிலேயே இது பிரபலமடைந்தது. பிரெஞ்ச் புயல் புரட்சியின் போது தான் கில்லட்டின் கண்டுபிடிக்கப்பட்டது என்ற கருத்து பொதுவாக நிலவிய போதும் இது அதற்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டது. ஜெர்மனியில் 13-ம் நூற்றாண்டு முதல் இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அப்போது இதன் பெயர் டைல். இத்தாலியில் இதன் பெயர் மானையா ஸ்காட்லாந்தில் 1581 ஆம் ஆண்டு ரீசன்ட் மார்ட்டனின் தலை இதன் மூலமாகவே கொய்யப்பட்டது.
ஏப்ரல் 25, 1897
தமிழகத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நீராரும் கடலுடுத்த நிலமடந்தை என்னும் பாடலின் ஆசிரியர் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை இன்று காலமானார்.
ஏப்ரல் 25
புராணக் கதைகளுக்கு புது வடிவம் தந்து, புதிய விளக்கம் தந்த புதுமைப்பித்தன் இன்று தான் பிறந்தார். அவரது இயற்பெயர் விருத்தாச்சலம்.
ஏப்ரல் 25, 1912
தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் பிறந்த நாள் இன்று.
புகழுக்கு ஆசைப்படாத அடக்கம், இலக்கியத்திலும் மொழியிலும் ஆழமான அறிவு, போலி ஆடம்பரத்தை ஒதுக்கிய மாமனிதர், தன்னுடைய எழுத்தில் நல்ல சிந்தனைகளை மட்டுமே வழங்கிய பண்பாளர் மு.வ.
ஏப்ரல் 25, 1947
லட்சுமி காந்தன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரபல சினிமா நடிகர்களான எம் கே தியாகராஜ பாகவதரையும் என் எஸ் கிருஷ்ணனையும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
இரண்டு வருடங்கள், இரண்டு மாதங்கள், 13 நாள்கள் சிறையிலிருந்த இருவரும் இன்று பிற்பகல் 1.15 மணிக்கு விடுதலையானார்கள்.
ஏப்ரல் 25, 1961
சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை இன்று காலமானார்.
சொல்லாராய்ச்சியில் வல்லவரான இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர். இவர் எழுதிய தமிழின்பம் என்னும் நூல் சாகித்த அகாடமி பரிசு பெற்ற முதல் தமிழ் நூலாகும்.
ஏப்ரல் 25, 1989
தமிழ் இமயம் என்று அழைக்கப்பட்ட டாக்டர் வ. சுப. மாணிக்கம் மறைந்த நாள்.
சிட்டுக் குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப் போன கணவர் வீடு திரும்பலே ...
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே...
போன்ற பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் இனிமையும் அதற்குள் கலந்து வரும் குழந்தைத்தனமும் நம் மனதுக்குள் நிறையும்.
அந்தப் பாடல்களையெல்லாம் பாடிய பாடகி எம். எஸ். இராஜேஸ்வரி மறைந்த நாள்.
ஏப்ரல் 25, 2025
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைந்த நாள்.

Comments
Post a Comment
Your feedback