ஏப்ரல் 7, 1827
உலகில் முதன் முதலாக இன்று தீப்பெட்டி விற்பனை தொடங்கியது.
ஏப்ரல் 7, 1920
இந்திய இசையின் பெருமையை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதில் முக்கியமான ஒருவரான உலகப் புகழ் பெற்ற சித்தார் இசைக்கலைஞர் பண்டிட் ரவி சங்கர் பிறந்த நாள்.
ஏப்ரல் 7, 1947
போர்ட் கார் நிறுவனத்தின் நிறுவனர் ஹென்றி போர்டு மறைந்த நாள்.
இவர் அறிமுகப்படுத்திய வாகனங்கள் தான் அமெரிக்கப் போக்குவரத்திலும், தொழில்துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்தன.
ஏப்ரல் 7, 1998
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இசையமைப்பாளர்களுள் ஒருவரான எஸ். வி. வெங்கட்ராமன் மறைந்த நாள். இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தார். இவர் நடிகராகவும், பாடகராகவும் சில திரைப்படங்களில் தன்னை நிரூபித்தவர்.

Comments
Post a Comment
Your feedback