ஏப்ரல் 8, 1857
மாட்டுக் கொழுப்பு தடவிய குண்டுகளைப் பயன்படுத்த மறுத்ததற்காக இந்திய வீரர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளால் அவமானப்படுத்தப்பட்டனர்.
இதைக் கண்டு பொறுக்காத மங்கள் பாண்டே என்னும் இந்திய வீரன், மூன்று பிரிட்டிஷ் அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக். கொன்றுவிட்டான்.
கர்னல் வீலர் தலைமையில் சென்ற பிரிட்டிஷ் படை மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு பாண்டேயைக் கைதுசெய்தது.
இருபத்தாறு வயதான மங்கள் பாண்டே இன்று பாரக்பூரில் ஒரு மரக் கிளையில் தூக்கிலிடப்பட்டான்.
ஏப்ரல் 8, 1894
வந்தே மாதரம் எழுதிய பங்கிம் சந்திரசட்டர்ஜி இன்று காலமானார்.
ஏப்ரல் 8, 1926
சந்தச் சரபக் கவி உடுமலை முத்துச்சாமிக் கவிராயர் இன்று காலமானார்.
ஏப்ரல் 8, 1964
புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலம் மறைந்த நாள்.
ஏப்ரல் 8, 1977
எழுநூறு கோடி சதுர மைல் பரப்புள்ள சூரியப் புள்ளி இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஏப்ரல் 8, 1989
பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவரான ஏ. எம். ராஜா மறைந்த நாள்.
1950 களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.
இவரது மனைவி பிரபல பாடகி ஜிக்கி.
வாராயோ வெண்ணிலாவே வாராயோ வெண்ணிலவே கேளாயோ எங்கள் கதையே...
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா? காதல் கண்கள் உறங்கிடுமா?...
ஆடாத மனமும் ஆடுதே
ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம்
வா வா நாம் காணலாம்....
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்...
பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ
ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ ...
மாசிலா உண்மைக் காதலே…
மாறுமோ செல்வம் வந்த போதிலே…
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே...
போன்ற இவர் பாடிய பல பாடல்கள் அமரத்துவம் வாய்ந்தவை.
ஏப்ரல் 8, 2013
இங்கிலாந்தின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் என்ற பெருமை கொண்ட மார்கரெட் தாட்சர் மறைந்த நாள்.
தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான ஜெயகாந்தன் மறைந்த நாள்.
இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் இவர் .
ஏப்ரல் 8, 2025
இலக்கியவாதியும் அரசியல்வாதியுமான குமரி அனந்தன் மறைந்த நாள். நாடாளுமன்றத்தில் முதன்முதலில் தமிழில் பேசிய பெருமைக்குச் சொந்தக்காரர் இவர்.

Comments
Post a Comment
Your feedback