ஏப்ரல் 14, 1865
ஆபிரகாம் லிங்கன் இன்று சுடப்பட்டார்.
வாஷிங்டனில் ஒரு நாடக அரங்கில் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஜான் பூத் என்பவனால் சுடப்பட்டார்.
ஏப்ரல் 14, 1890
இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பியான பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் இன்று தான் பிறந்தார்.
ஏப்ரல் 14, 1896
கன்னிமாரா நூலகத்தின் திறப்பு விழா நடந்தது.
அன்றைய சென்னை மாகாண கவர்னர் கன்னிமாரா பொதுமக்களுக்கு படிப்பார்வம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நூலகத்திற்கு 1890 ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். இதனால் இந்த நூலகத்திற்கு அவர் பெயரே வைக்கப்பட்டது.
ஏப்ரல் 14, 1907
நாடக நடிகராக இருந்து பின் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகராகப் புகழ் பெற்றவரான எம். ஆர். ராதா பிறந்த நாள்
ஏப்ரல் 14, 1912
டைட்டானிக் இன்று மூழ்க ஆரம்பித்தது
உலகிலேயே மிகப்பெரிய சொகுசுக் கப்பலான டைட்டானிக் இங்கிலாந்தில் சவுத் ஆம்டனிலிருந்து நியூயார்க்குக்கு இன்று தன் முதல் பயணத்தைத் துவக்கியது. நள்ளிரவுக்கு சற்று முன்னர் பனிப்பாறையில் மோதியதால் மூழ்க ஆரம்பித்தது . இதில் சென்ற 2004 பேரில் 1403 பேர் பலியானார்கள். கடலில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்றவர்கள் மறுநாள் காலை 8 மணி அளவில் ஒரு கப்பலால் மீட்டுக் காப்பாற்றப்பட்டார்கள். கப்பல் போக்குவரத்தில் நடந்த மிகப்பெரிய விபத்து இது.
ஏப்ரல் 14,1922
சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்திற்கு இரவீந்திரநாத் தாகூர் அடிக்கல் நாட்டினார்.
ஏப்ரல் 14,1927
தமிழ்த் திரைப்படத்தின் முதல் பின்னணிப் பாடகி என்று கருதப்படும் பி. ஏ. பெரியநாயகி பிறந்த நாள். இவர் ஒரு நடிகையும் கூட.
ஏப்ரல் 14,1950
ரமண மகரிஷி இரவு 8.47 க்கு தனது ஆசிரமத்தில் மகாசமாதி அடைந்தார்.
ஏப்ரல் 14,1950
வசந்த் அண்ட் கோ நிறுவங்களின் நிறுவனர் எச். வசந்தகுமார் பிறந்த நாள்.
விற்பனையாளராக வேலைக்குச் சேர்ந்து, சொந்தமாக ஒரு மளிகைக் கடை தொடங்கி மெல்ல மெல்ல ஒரு வர்த்தக சாம்ராஜ்யத்தை அமைத்தவர் இவர். வசந்த் தொலைக்காட்சியின் நிறுவனரும் இவர் தான். நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாட்டுச் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள தொழிலதிபர் இவர்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மறைந்த பல முக்கிய பிரமுகர்களும் இவரும் ஒருவர். 2020 ஆகஸ்ட் 28, அன்று மறைந்தார்.
கடந்த 9 ஏப்ரல் 2025 அன்று மறைந்த குமரி அனந்தன் இவருடைய சொந்த அண்ணன்.
ஏப்ரல் 14,1951
சென்னை தலைமை இடமாகக் கொண்டு தக்ஷிண ரயில்வே அதாவது தென்னக ரயில்வே அமைக்கப்பட்டது
ஏப்ரல் 14,1962
சீரிய சிந்தனைகள், செயல் திட்டங்கள் மூலமாக பெரும் புகழ் பெற்ற பொறியியல் அறிஞர் எம் எஸ் விஸ்வரய்யா இன்று காலமானார். புகழ் மணக்க வாழ்ந்த அவர் இறக்கும்போது வயது நூற்று ஒன்று.
ஏப்ரல் 14,1972
காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் காலமானார்.
ஏப்ரல் 14,1990
டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது

Comments
Post a Comment
Your feedback