ஏப்ரல் 21, 1526
முதலாம் பானிபட் போர் நடந்த நாள் டெல்லிக்கு அருகில் 80 கிலோமீட்டர் தூரத்தில் இப்ராஹிம் லோடி தலைமையில் நூற்றுக்கணக்கான யானைகள் மீது வில்வீரர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குதிரை வீரர்களும் பாபரின் 12 ஆயிரம் வீரர்களுக்கு எதிராக போர் துவங்கினர். பாபரின் போர் உத்தியினால் இப்ராஹீம் லோடியின் பெரும்படை சின்னாபின்னமாக்கப்பட்டது. போரில் மடிந்த டெல்லி வீரர்களின் எண்ணிக்கை 50,000 க்கு மேல் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். காலையில் ஆரம்பித்த போர் நடுப் பகலில் முடிந்துவிட்டது. பாபரின் இந்த வெற்றி இந்தியாவில் முகலாயப் பேரரசுக்கு அடிக்கல் நாட்டியது.
ஏப்ரல் 21, 1925
வாண்டுமாமா என்ற பெயரில் சிறுவர் படைப்புகளை வழங்கிப் புகழ் பெற்றவரான வி. கிருஷ்ணமூர்த்தி பிறந்த நாள்.
கல்கி, பூந்தளிர், கோகுலம் போன்ற பல இதழ்களில் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். வாண்டுமாமா என்ற பெயரில் சிறுவர் இலக்கியங்களையும் கௌசிகன் என்ற பெயரில் பொதுவான படைப்புகளையும் வழங்கியவர் இவர்.
உலக வங்கி, இன்டர்நேஷனல் மானிட்டரி பண்ட்(IMF) முதலானவை தோன்ற அடித்தளம் அமைத்த பிரிட்டிஷ் பொறியியல் அறிஞர் ஜான் மேனாட் கினஸ் இன்று காலமானார்.
The Economic Consequences of Peace என்னும் தன் நூல் மூலம் உலகப் புகழ் பெற்றவர் இவர்.
ஏப்ரல் 21, 1964கவிஞர் பாரதிதாசன் இன்று சென்னை பொது மருத்துவமனையில் காலமானார்
ஏப்ரல் 21, 1978
நாம் இருவர், வேதாள உலகம் முதலான திரைப்படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் காலமானார்.
தன்னுடைய சொந்தக் குரலில் உச்சஸ்தாயில் பாடும் இவருடைய திறமை இவருக்குத் தனித்த புகழைத் தந்தது.
ஏப்ரல் 21, 1986
இந்த நாளில் இரண்டு புகழ்பெற்ற நடிகைகளின் கணவர்கள் ஒரே நாளில் மறைந்தனர் .
வைஜெயந்தி மாலாவின் கணவர் டாக்டர் பாலி இன்று காலமானார்.
நடிகை சரோஜாதேவியின் கணவர் ஹர்ஷாவும் இன்று காலமானார்.
ஏப்ரல் 21, 2013
மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி (நவம்பர் 4, 1929 - இன்று தனது 83 வது வயதில் மறைந்தார்.

Comments
Post a Comment
Your feedback