ஏப்ரல் 18, 1859
சில துரோகிகளினால் காட்டிக் கொடுக்கப்பட்டு, ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட தாந்தியாதோப் இன்று தூக்கிலிடப்பட்டார்
ஏப்ரல் 18, 1916
சுதேசமித்திரன் இதழைத் துவக்கியவரும் தமிழ் பத்திரிக்கைத் துறை முன்னோடியும் இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றுவதற்கு காரணமாக இருந்த முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஜி.சுப்பிரமணிய ஐயர் இயற்கை எய்தினார். நண்பர்களுடன் சேர்ந்து இந்து (HINDU) பத்திரிக்கையைத் துவக்கியவரும் இவரே. ஸ்வராஜ்ஜியமே விமோசனம் என்று வலியுறுத்தியதன் காரணமாக சிறை சென்றவர் இவர்.
ஏப்ரல் 18, 1955
சார்பியல் கொள்கையைத் தந்த உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி நோபல் பரிசு பெற்ற அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் காலமானார்.
ஏப்ரல் 18, 1994
குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அமெரிக்காவில் காலமானார்.
அப்போது அவருக்கு வயது 70.
23 வயதில் குமுதம் இதழைத் துவக்கி பத்தாண்டுகளில் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் வார இதழாக உயர்த்திக் காட்டியவர். குமுதத்தையே தனது முகமாக காட்டிக் கொண்டு தன் முகத்தை மறைத்துக் கொண்டவர் இவர்.

Comments
Post a Comment
Your feedback