ஏப்ரல் 10, 1894
நியூயார்க்கில் பில்லியன் ஹண்ட் என்பவர் சேப்டி பின்னைத் தயாரித்து அதற்கு காப்புரிமம் பெற்றார்.
ஏப்ரல் 10, 1931
லெபனானில் பிறந்து உலகம் முழுதும் புகழ் பெற்ற கவிஞர் கலீல் ஜிப்ரான் மறைந்த நாள்.
ஏப்ரல் 10, 1989
ஆண்டவன் சுவாமிகள் என்று பக்தியுடன் அழைக்கப்பட்டவரும் ஶ்ரீரங்கம் மொட்டை கோபுரத்தை பொதுமக்கள் மற்றும் அரசின் நிதியுதவியோடு மாபெரும் கோபுரமாக கட்டி முடித்தவருமான ஶ்ரீநிவாச ராகவாச்சாரியார் காலமானார்.
ஏப்ரல் 10, 1995
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் மறைந்த நாள்.
இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே.
ஏப்ரல் 10, 1999
மலையாள மொழியின் எழுத்தாளர்களில் முக்கியமானவரான தகழி சிவசங்கர பிள்ளை மறைந்த நாள்.
செம்மீன் என்ற அவரது நாவல் உலகப் புகழ் பெற்ற ஒரு நாவல். இதை திரைப்படமாகவும் தயாரித்தனர். அதற்கு சிவசங்கரப் பிள்ளையே திரைக்கதை எழுதினார். அந்தத் திரைப்படமும் தேசிய விருது பெற்றது. இவரது பெரும்பாலான நாவல்கள் திரைப்படங்களாக வந்தன.
மலையாளத்தில் 36 நாவல்களையும் 500க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் ஒரு நாடகத்தையும் எழுதியுள்ளார்.

Comments
Post a Comment
Your feedback