ஏப்ரல் 26, 1731
ராபின்சன் குரூஸோ என்னும் குழந்தைகள் இலக்கியத்தை உருவாக்கிய ஆங்கில நாவலாசிரியர் டேனியல் டிபோ காலமானார்.
ஏப்ரல் 26, 1762
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் பிறந்த தினம்.
ஏப்ரல் 26, 1897
மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை மறைந்த தினம்.
இவர் எழுதிய புகழ் பெற்ற நாடகமான மனோன்மணீயம் இவருடைய பெயரோடு சேர்ந்து கொண்டது.
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
- மனோன்மணியம் சுந்தரனார்
என இவர் எழுதிய பாடலின் ஒருபகுதி தான் இன்று தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்படுகிறது.
ஏப்ரல் 26, 1920
கணித மேதை ராமானுஜம் சென்னையில் இன்று காலமானார்.
ஏப்ரல் 26,1943வங்கச் சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய பெருங்கடலில் ஜெர்மனி நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பலுக்கு மாற்றப்பட்டு ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றார்.
ஏப்ரல் 26,1977
ஈழத் தந்தை செல்வா காலமானார்.

Comments
Post a Comment
Your feedback