ஏப்ரல் 17, 1756 -
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள்.
ஏப்ரல் 17, 1785
பன்மொழி அறிஞரும் பெரும் புலவருமான சிவஞான முனிவர் காலமானார்.
இவர் கம்பர் அந்தாதி, சோமேஸ்வரர் முதுமொழி வெண்பா, திருத்தொண்டர் திருநாமக் கோவை போன்ற நூல்களை எழுதியவர்.
ஏப்ரல் 17, 1790
புகழ்பெற்ற அறிவியல் அறிஞரும் அரசியல்வாதியுமான பெஞ்சமின் பிராங்கிளின் இன்று காலமானார்.
ஏப்ரல் 17, 1912
மலையாள மொழி எழுத்தாளரான தகழி சிவசங்கரப் பிள்ளை பிறந்த நாள்.
இவரது படைப்பான செம்மீன் ஒரு புகழ் பெற்ற நூல்.
ஏப்ரல் 17, 1917
தமிழில் பிறமொழிக் கலப்பு எப்படி அவசியம் இல்லையோ அப்படியே எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் மாற்றங்களைச் செய்யக்கூடாது என உறுதியாக இருந்த வ.சுப.மாணிக்கனார் புதுக்கோட்டை மேலைச் சிவபுரியில் இன்று பிறந்தார்.
ஏப்ரல் 17, 1975
இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும் ஜனாதிபதியாகவும் பணியாற்றிய தத்துவ மேதை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இன்று காலமானார்.
முடியாதது. எம்.எஸ்.விஸ்வநாதன் - டி. கே. இராமமூர்த்தி என்ற இரட்டை இசைஅமைப்பாளர்களுள் ஒருவரான டி. கே. இராமமூர்த்தி மறைந்த நாள் இன்று.

Comments
Post a Comment
Your feedback