Skip to main content

Posts

Showing posts from August, 2025

செப்டம்பர் 1

   செப்டம்பர் 1, 1604  சீக்கியர்களின் புனித நூலாகக் கருதப்படும் ஆதி கிரந்த் இன்று தான் பொற்கோவிலில் வைக்கப்பட்டது. செப்டம்பர் 1 1799: திருநெல்வேலியில் முகாமிட்டிருந்த ஆங்கிலேய படைத்தளபதி மேஜர் பானர் மேன் செப்டம்பர் 4ஆம் தேதி தன்னை பாளையங்கோட்டையில் வந்து சந்திக்கும்படி கட்டபொம்மனுக்குக் கடிதம் அனுப்பிய நாள்.  செப்டம்பர் 1 1859: சிகாகோ ரயில் பாதையில் தூங்கும் வசதி கொண்ட ரயில் பெட்டியில் முதன் முதலில் கழிப்பறை வசதி செய்யப்பட்டது. செப்டம்பர் 1 1877: தமிழறிஞர் அ. வரதநஞ்சைய பிள்ளை பிறந்த தினம். செப்டம்பர் 1 1895: கர்நாடக இசைக் கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த தினம். செப்டம்பர் 1 1896:: ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை உலகம் முழுதும் தோற்றுவித்த  பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா பிறந்த தினம். செப்டம்பர் 1 1928: முதல் கார்ட்டூன் பேசும் படம் நியூயார்க்கில் திரையிடப்பட்டது. ஈசாப்பின் டின்னர் டைம் என்னும் நீதி கதை இது. செப்டம்பர் 1 1939: கடுமையான ஊனமான மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட ஜெர்மனி மக்களை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரும் திட்டத்திற்கு ஹிட்லர் இன்று ஒப்புத...

ஆகஸ்ட் 31

ஆகஸ்ட் 31, 1688 பில்கிரீம்ஸ் புரோகிரஸ் என்னும் நூலின் மூலம் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜான் பனியன் லண்டன் நகரில் இன்று காலமானார். ஓட்டை உடைசல் பழுது பார்க்கும் தொழிலாளியின் மகனான இவர் ஓரளவே எழுதப் படிக்கத் தெரிந்தவர். தன் தந்தையின் தொழிலையே செய்து வந்தார். மத நம்பிக்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டதால் அதுவே அவருக்கு மனச்சிதைவை உருவாக்கியது.  மதத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆழமான ஈடுபாடு மற்றவர்களின் நிம்மதியான  வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்தது. பலமுறை எச்சரிக்கப்படும் மற்றவர்களைத் தொந்தரவு செய்யும் அவரது போக்கு  மாறாததால் நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. சிறையிலும் மத சம்பந்தமான சில நூல்களை எழுதினார். தண்டனை முடிந்து விடுதலையான பின் மீண்டும் முன்பு போலவே பிறழ்வாக நடந்து கொண்டதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறையில் அவர் எழுதியது தான் பில்கிரீம்ஸ் புரோகிரஸ். அது தான் உலகப் புகழ் பெற்ற நூலாக விளங்குகிறது. அதைத்  தழுவி தமிழில் ஒரு  நூல் எழுதப்பட்டது. அதன் பெயர் இரட்சணிய யாத்ரிகம். ஆகஸ்ட் 31, 1909 புற்றுநோய் சிகிச்சையில் பயன்ப...

ஆகஸ்ட் 30

  ஆகஸ்ட் 30, 1659 ஷாஜகானின் மூத்த மகனும்    பகவத் கீதையை சமஸ்கிருதத்திலிருந்து பெர்ஷிய மொழியில் மொழிபெயர்த்தவருமான தாரா ஷிக்கோவை அரியணைப் போட்டியின் காரணமாக சொந்த சகோதரன் ஔரங்கசீப் இன்று  கொன்றான்.  மறுநாள் தலையற்ற தாராவின் உடலை யானையின் மீது ஏற்றி தில்லி தெருக்களில் ஊர்வலம் விட்டு மகிழ்ந்தான் ஔரங்கசீப். ஆகஸ்ட் 30, 1871 அணு இயற்பியலில் முக்கியமான பங்காற்றிய ரூதர் ஃபோர்ட் (Ernest Rutherford) இன்று நியூசிலாந்தில் பிறந்தார். ஆகஸ்ட் 30, 1875  நல்லூர் ஞானப்பிரகாசர் பிறந்த நாள். நல்லூர் ஞானப்பிரகாசர் ஒரு பன்மொழிப் புலவர்.  இலத்தின், கிரேக்கம் உட்பட பதினெட்டு மொழிகளில் எழுதவும், பேசவும் வல்லவராய் இருந்தார்.  தமிழின் தொன்மையை உலக அறிஞர்கள் அறிய இவர் எழுத்தும் ஒரு காரணம்.  பல தமிழ் நூல்களின் ஆசிரியர். சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி ஒரு சிறந்த நூலாகும். ஜனவரி 22, 1947 இவர் மறைந்த நாள்.   ஆகஸ்ட் 30, 1957  கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்  மறைந்த நாள்.  நாகர்கோயிலில் நவம்பர் 29, 1908 - ...

ஆகஸ்ட் 27

  ஆகஸ்ட் 27 ,1859  வணிக நோக்கிலான  உலகின்  முதலாவது எண்ணெய்க் கிணறு அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் இன்று தோண்டப்பட்டது. ஆகஸ்ட் 27 ,1916  தமிழறிஞர் ந. சுப்பு ரெட்டியார் பிறந்த நாள்.  ஆகஸ்ட் 27 ,1939  உலகின் முதலாவது ஜெட் விமானம் இன்று பயன்பாட்டுக்கு வந்தது.  ஆகஸ்ட் 27 , 1979  இந்தியாவின்  கடைசி  வைஸ்ராயாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு , அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். படகில் செல்லும்போது அதில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் அவர் மரணம் அடைந்தார். அவருடன் அவரது பேரன் உட்பட மூவர் பலியானார்கள். ஆகஸ்ட் 27 , 1980 பன்மொழிப்புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் மறைந்த நாள். 

ஆகஸ்ட் 26

  ஆகஸ்ட்  26, 1883 திரு.வி.க. பிறந்த நாள்.   காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாக இன்று  திரு.வி.க. பிறந்தார். பெரிய புராணத்துக்கு குறிப்புரையும் வசனமும் எழுதியவர் அவர். யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை மீது கொண்டிருந்த பற்றால்,  கதிரைவேற்பிள்ளை சரிதம் என்ற நூலை எழுதினார்.  பட்டினத்துப் பிள்ளையார் பாடல் திரட்டு, தேச பக்தாமிர்தம், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், நாயன்மார் திறம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், முருகன் அல்லது அழகு, திருக்குறள் விரிவுரை, உள்ளொளி உள்ளிட்ட ஏராளமான படைப்புகளை வழங்கியவர்.  சிறந்த மேடைப் பேச்சாளரான திரு.வி.க.  தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்பட்டார். ஆசிரியராக, அரசியல்வாதியாக, இலக்கிய ஆர்வலராக, மேடைப் பேச்சாளராக வாழ்ந்தவர் இவர்.   ஆகஸ்ட்  26, 1910 அல்பேனியா நாட்டைச் சேர்ந்த  ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற ரோமன் கத்தோலிக்கப் பெண்ணாக இந்தியாவில் நுழைந்து கல்கத்தாவில் ஆதரவற்றோருக்கான இல்லம் அமைத்த தெரசா அம்மையார் பிறந்த நாள் இன்று.  ச...

ஆகஸ்ட் 24

 ஆகஸ்ட் 24,1891 தாமஸ்  ஆல்வா எடிசன் அசையும் படக்கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றார். ஆகஸ்ட் 24,1906 எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் இன்று பிறந்தார்.  ஆகஸ்ட் 24,1927  நடிகை அஞ்சலிதேவி இன்று பிறந்தார்.  ஆகஸ்ட் 24,1929 பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத் இன்று பிறந்தார்.  ஆகஸ்ட் 24,1961 விடுதலைப் போராட்ட வீரர் சர்தார் வேதரத்தினம் பிள்ளை மறைந்த நாள். ஆகஸ்ட் 24,1972 நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை மறைந்த நாள். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை  தெய்வ பக்தியும் தேச பக்தியும் நிறைந்தவர். காந்தியக் கவிஞர் என்று போற்றப்பட்டவர். ''கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது...  சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்''  என்று  பாடிய உப்புச்சத்தியாகிரக வழிநடைப் பாடல்  மூலம் எல்லோருக்கும் அறிமுகமானவர்.  'தமிழன் என்றோர் இனமுண்டு,  தனியே அவர்க்கொரு குணமுண்டு;  அமிழ்தம் அவனுடைய மொழியாகும்,  அன்பே அவனுடை வழியாகும்'' என்று பாடியவர்.  ஆகஸ்ட் 24,1986 ஆட்சிமொழிக்காவலர் இராமலிங்கனார் மறைந்த நாள்.  ஆகஸ்ட் 24,1991 உக்ர...

ஆகஸ்ட் 25

  ஆகஸ்ட் 25, 1819 நீராவி இஞ்சினைக் கண்டுபிடித்து தொழில் புரட்சிக்கு முக்கியமான காரணமாக விளங்கிய ஜேம்ஸ் வாட்   இங்கிலாந்தில் இன்று காலமானார் . ஆகஸ்ட் 25, 1867 டைனமோவைக்   கண்டுபிடித்த மைக்கேல் பாரடே   இங்கிலாந்தில் இன்று காலமானார் . ஆகஸ்ட் 25, 1906 வாரியார் ஸ்வாமிகள் என்று அழைக்கப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த தினம் . எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர் . 12 வயதிலேயே ஆயிரக்கணக்கான பாடல்களை மனப்பாடமாகச் சொல்லும் திறன் பெற்றிருந்தார் . சிறு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார் . இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் . முறையான சங்கீதப் பயிற்சி பெற்றிருந்தவர் . வீணை வாசிப்பதில் சிறந்து விளங்கியவர் . அதனால் இவர் தன்னுடைய ஆன்மீக ச்  சொற்பொழிவுகளில் இசையோடு நகைச்சுவை கலந்து எளிய தமிழில் பேசி எல்லோருடைய விருப்பத்துக்கும் உரியவராக விளங்கினார் .  1993 நவம்பர் 7 இல் இந்தியா வரும் போது விமானப் பயணத்திலேயே காலமானார் . தன்னுடைய வாழ்க்கை...

ஆகஸ்ட் 23

  ஆகஸ்ட் 23,1872  ஆந்திராவின் முதலாவது  முதலமைச்சர் த.பிரகாசம் பிறந்த நாள்.   ஆகஸ்ட் 23,1914 தமிழ்த் திரைப்பட நடிகர் டி. எஸ். பாலையா இன்று பிறந்தார்.  ஆகஸ்ட் 23,1947  இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று தான் நடைபெற்றது.  ஆகஸ்ட் 23,1947  சர்க்கார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் துணை பிரதமர் ஆனார். ஆகஸ்ட் 23,1949 அல்லையன்ஸ் குப்புசாமி அய்யர் மறைந்த நாள்.  ஆகஸ்ட் 23,1994 ஆரத்தி சகா (Arati Saha) இன்று காலமானார்.  1959 செப்டம்பர் 29 அன்று ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்தார். அதன் மூலம் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் ஆசியப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் அவர். ஆகஸ்ட் 23,2018 பத்திரிகையாளர் மட்டும் கட்டுரை ஆசிரியர் குல்தீப் நய்யார் இன்று மறைந்தார்.  ஆகஸ்ட் 23,2023 இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் முனைக்கருகில் பிரக்யான் ரோவர் உதவியுடன் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

ஆகஸ்ட் 22

  ஆகஸ்ட் 22,1639 இங்கிலாந்து கிழக்கிந்தியக் கம்பெனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை, அதாவது தற்போதைய சென்னையை நிர்மாணித்தனர்.  அதை நினைவுபடுத்தும் வகையில் இந்த நாள் மெட்ராஸ் டே என்று குறிப்பிடப்படுகிறது.  ஆகஸ்ட் 22, 1877 இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஆனந்த குமாரசுவாமி பிறந்த தினம்.  ஆகஸ்ட் 22, 2004 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பயணிகள் விமானம் சரஸ் பெங்களூரில் இருந்து இன்று தன் பயணத்தை தொடங்கியது. 18 பயணிகள் இதில் பயணிக்க முடியும். 

ஆகஸ்ட் 21

  ஆகஸ்ட் 21,   1888 கால்குலேட்டர் இன்று தான் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் இன்று அதன் செயல் விளக்கம் நடந்தது. ஆகஸ்ட் 21, 1907 ஜீவா என்று அழைக்கப்பட்ட ப.ஜீவானந்தம் பிறந்த நாள். ஆகஸ்ட் 21, 1995 நோபல் பரிசு பெற்ற இந்தியாவில் பிறந்து அமெரிக்க விஞ்ஞானியாக வளர்ந்த சுப்பிரமணியன் சந்திரசேகர் இன்று அமெரிக்காவில் காலமானார்.  விண்வெளி இயற்பியலில் சந்திரசேகர் லிமிட் ( Chandrasekar Limit ) என்ற கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர் அவர்.  ஆகஸ்ட் 21,   2006 புகழ் பெற்ற செனாய் இசைக்கலைஞர் பிஸ்மில்லா கான் இன்று காலமானார்.

ஆகஸ்ட் 20

ஆகஸ்ட் 20, 1828 ராஜாராம் மோகன் ராய் பிரம்ம சமாஜத்தை இன்று நிறுவினார். ஆகஸ்ட் 20, 1856 நாராயண குரு பிறந்த தினம் ஆகஸ்ட் 20, 1944 முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினம். ஆகஸ்ட் 20, 1944 இந்தியாவிற்குள் புகுந்த ஜப்பான் படைகளின் கடைசி அணி இன்று துரத்தி அடிக்கப்பட்டது. ஆகஸ்ட் 20, 1946 இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி பிறந்த நாள்.  ஆகஸ்ட் 20, 1960 குட் நைட் பைவ் என்ற ரஷ்ய விண்கலம் மூலமாக நேற்று அதாவது ஆகஸ்ட் 19 அன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பெல்கா மற்றும் ஸ்டெல்கா என்று 2 நாய்களும் இன்று பூமிக்கு பாதுகாப்பாக திரும்பின. சுற்றுப்பாதையில் ஒரு நாள் பயணித்த பின்பு ஒரு  ராக்கெட் மூலமாக ஸ்புட்னிக் இடை மறிக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டு அதிலிருந்த லேண்டிங் கேப்ஸ்யூல் மூலம் அந்த இரண்டு நாய்களும் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தன. இந்த வெற்றியைத் தொடர்ந்து ஏழு மாதம் கழித்து ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டு விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் என்ற சாதனை புரிந்தார்.  ஆகஸ்ட் 20, 1973 தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் புளி மூட்டை ராமசாமி இன்று காலம...

ஆகஸ்ட் 19

  ஆகஸ்ட் 19, 1662 மருத்துவர்கள் ஊசி போடப் பயன்படும் இன்ஜெக்க்ஷன் சிரிஞ்சு, மெக்கானிக்கல் கால்குலேட்டர் போன்றவற்றை மட்டுமல்லாமல் பாஸ்கல் விதியையும்  கண்டுபிடித்த  பாஸ்கல் (Blaise Pascal) பிரான்சில் இன்று காலமானார்.  ஆகஸ்ட் 19, 1871 தன் சகோதரரோடு சேர்ந்து ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்த Orville Wright அமெரிக்காவில் இன்று பிறந்தார். ஆகஸ்ட் 19, 1887 தீரர் சத்தியமூர்த்தி பிறந்த நாள். ஆகஸ்ட் 19, 1950 இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர், தலை சிறந்த பொறியாளர், புகழ் பெற்ற எழுத்தாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்ட சுதா மூர்த்தியின் பிறந்த நாள்.  ஆகஸ்ட் 19, 1960 ஸ்புட்னிக் 5 என்ற ரஷ்ய விண்கலம் மூலமாக விண்வெளிக்கு இரண்டு நாய்கள் அனுப்பப்பட்டன. Belka மற்றும் Strelka என்ற அந்த இரண்டு நாய்களும் விண்வெளியில் பயணித்த  முதல் விலங்குகள் என்ற பெருமையைப் பெற்றன. மறுநாள் அவை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக திருப்பி வந்தன. 

ஆகஸ்ட் 18

ஆகஸ்ட் 18, 1892 தி.வை.சதாசிவ பண்டாரத்தார் பிறந்த தினம். தமது ஆயுட்காலம் முழுவதையும் தமிழ்ப்பணிக்கே  அர்ப்பணித்துப் புகழ் பெற்றவர் தமிழறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்.  இவர் இயற்றிய 'முதற்குலோத்துங்க சோழன்', 'பாண்டியர் வரலாறு', 'திருப்புறம்பியத் தல வரலாறு', 'காவிரிப்பூம்பட்டினம்' ஆகிய வரலாற்று நூல்கள்  குறிப்பிடத்தக்க சிறப்பான நூல்கள். 'சிதம்பர விநாயகர் மாலை' எனும் நூல் இவரால் இயற்றப்பட்டது. ஆகஸ்ட் 18, 1945 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைந்ததாகக் கருதப்படுகின்ற நாள். ஆகஸ்ட் 18, 1951 இந்தியாவின் முதல் ஐஐடி (IIT) இன்று மேற்கு வங்காளத்தில் உள்ள காரக்பூரில்  தொடங்கப்பட்டது. 

ஆகஸ்ட் 17

ஆகஸ்ட் 17, 1944 மணிப்பூர் மாநிலத்திலிருந்து ஜப்பானியப் படைகள் இன்று விரட்டி அடிக்கப்பட்டன.  ஆகஸ்ட் 17, 1945 ஜப்பானுக்குச் செல்லும் வழியில் சுபாஷ் சந்திர போஸ் சென்ற விமானம் தாய்வான் அருகே விபத்திற்கு உள்ளாகி நொறுங்கி விழுந்ததில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.  ஆகஸ்ட் 17, 1947 விடுதலைக்குப் பிறகு இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் படையின் முதல் ரெஜிமென்ட் வெளியேறியது. 

ஆகஸ்ட் 16

ஆகஸ்ட் 16, 1705 சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கணித மேதை ஜேக்கப் பெர்னொலி இன்று காலமானார். First Principals of the Calculus of variation என்ற இவரது தேற்றம் கணிதத்தில் முக்கியமான   ஒன்றாகும்.  ஆகஸ்ட் 16, 1886 ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மறைந்த தினம். ஆகஸ்ட் 16, 1899 வேதியியல் ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படும் புன்சன் விளக்கை கண்டுபிடித்த ஜெர்மனியைச் சேர்ந்த ராபர்ட் புன்சன் இன்று மறைந்தார்.  ஆகஸ்ட் 16, 1973 ஸ்ரெப்டோமைசின் (Streptomycin) உட்பட பல ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளைக் கண்டுபிடித்த செல்மான் ஆபிரகாம் இன்று காலமானார். ஆகஸ்ட் 16, 2018 முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைந்த தினம்.

ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15, 1872    ஶ்ரீ அரவிந்தர் பிறந்த நாள். அவரது இயற்பெயர் அரவிந்த அக்ரோத்ய கோஷ்.  கொல்கத்தா நகரில் வாழ்ந்து வந்த, கிருஷ்ண தனகோஷ் – சுவர்ணலதா தம்பதிக்கு 3-வது மகனாக, 1872 ஆகஸ்ட் 15-ல் பிறந்தார் அரவிந்தர். ஆகஸ்ட் 15,  1892  தமிழறிஞரும்  தமிழக வரலாற்றாய்வாளருமான,   தி . வை . சதாசிவ பண்டாரத்தார் பிறந்த நாள். சோழர்களின் முழுமையான வரலாற்றை முதன் முதலில் எழுதியவர் இவர் தான். ஆகஸ்ட் 15,  1900 தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படும்   ந.பிச்சமூர்த்தி இன்று பிறந்தார். ஆகஸ்ட் 15,  1947 190 ஆண்டு கால அடிமை நிலையிலிருந்த  இந்தியா  இன்று  அந்நியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது.  ஆகஸ்ட் 15,  1947 முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் முதலாவது ஆளுநராக கராச்சியில் பதவியேற்றார். ஆகஸ்ட் 15, 1969 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO  (Indian Space Research Organisation) இன்று தான் தொடங்கப்பட்டது. 

ஆகஸ்ட் 14

 ஆகஸ்ட் 14, 1807 நீராவியால் இயங்கும் படகை உருவாக்கிய ராபர்ட் ஃபுல்டன் என்ற அமெரிக்கர் இன்று அந்தப் படகின் மூலமாக முதன்முதலாக நியூயார்க்கில் இருந்து அல்பேனி வரை 32 மணி நேரம் பயணித்து செயல் விளக்கம் செய்து காட்டினார்.  ஆகஸ்ட் 14, 1857  வெள்ளேகால் ப . சுப்பிரமணிய முதலியார் பிறந்த நாள். ஆகஸ்ட் 14, 1888 தாமஸ் ஆல்வா எடிசன் தான் கண்டுபிடித்த கிராமபோன் கருவியை இன்று அறிமுகப்படுத்தினார்.  ஆகஸ்ட் 14, 1911 உலக சமுதாய சேவா சங்கத்தை நிறுவிய வேதாத்திரி மகரிஷியின் பிறந்த நாள்.  ஆகஸ்ட் 14, 1947 பாகிஸ்தான் சுதந்தர நாள்.  ஆகஸ்ட் 14, 2016 பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் இன்று காலமானார். 

ஆகஸ்ட் 11

ஆகஸ்ட் 11, 1895 செல்லின் நியூக்ளியஸிலிருந்து நியூக்ளின் என்னும் பொருள் உருவாகிறது என்று கண்டுபிடித்த சுவிட்சர்லாந்தை சேர்ந்த விஞ்ஞானி ஜோகன் பிரெடெரிக் இன்று காலமானார். நியூக்ளின் என்று அவர் குறிப்பிட்ட அந்தப் பொருள்தான் இன்று நியூக்ளிக் அமிலம் என்று குறிப்பிடப்படுகிறது.  ஆகஸ்ட் 11, 1895 வங்காள கவர்னரை ஏற்றிச்  சென்ற ட்ரெயின் மீது வெடிகுண்டு வீசியதாக மெக்னாபுரில் ஹபிபூரைச் சேர்ந்த போஸ் என்னும் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டான். இந்திய விடுதலைப் போரில் தூக்குத் தண்டனை பெற்று உயிர் நீத்த  முதல் தியாகி இந்த இளைஞன் தான். 

ஆகஸ்ட் 10

ஆகஸ்ட்  10,1741 குளச்சல் போர் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படும் போரில் இன்று திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகளைத் தோற்கடித்தார்.  ஆகஸ்ட்  10,1894  இந்தியாவின் முன்னாள்  குடியரசுத் தலைவர் வி. வி. கிரி இன்று பிறந்தார்.  ஆகஸ்ட்  10,1897 உலகின் முதல் செயற்கை மருந்தான ஆஸ்பிரின் இன்று ஜெர்மனியைச் சேர்ந்த பெலிக்ஸ் ஹொப்மன்   என்பவரால் தயாரிக்கப்பட்டது.  ஆகஸ்ட்  10,1916 தமிழக எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான  இதழாசிரியர் சாவி இன்று தான் பிறந்தார்.  ஆகஸ்ட்  10,1963 சம்பல் கொள்ளைக்காரியாக இருந்து பின் அரசியல்வாதியாகிய மாறிய  பூலான் தேவி இன்று தான் பிறந்தார்.  ஆகஸ்ட்  10,2011  தமிழக முன்னாள் ஆளுநர்  பி. சி. அலெக்சாண்டர் மறைந்த நாள்.  

ஆகஸ்ட் 9

  ஆகஸ்ட்  9,1892  ஒரே நேரத்தில் செய்தி அனுப்பவும் செய்தியைப் பெறவும் என இரு வழியில் செயல்படும்  இருவழி தந்திக்கான  காப்புரிமம்  இன்று தாமஸ்  ஆல்வா எடிசனுக்கு வழங்கப்பட்டது .  ஆகஸ்ட்  9,1897 விடுதலைப் போராட்ட வீரர் ஈ.கிருஷ்ண ஐயர் பிறந்த தினம்.  ஆகஸ்ட் 9,1910 மின்சாரத்தால் இயங்கும் வாஷிங் மெஷின் இன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புக்காக ஆல்வா பிஷர் என்ற அமெரிக்க விஞ்ஞானிக்கு இன்று காப்புரிமம் வழங்கப்பட்டது. ஆகஸ்ட்  9,1941 தமிழறிஞர் க. ப. அறவாணன் பிறந்த நாள்.  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றியவர்.  23  டிசம்பர்   2018  இவர் மறைந்த நாள்.  இவருடைய மறைவுக்குப் பிறகு இவர் விட்டுச்சென்ற பதிப்பக மற்றும் தமிழ் இலக்கியப் பணிகளை இவருடைய துணைவியார் தாயம்மாள் அறவாணன் தொடர்ந்து வருகிறார். ஆகஸ்ட்  9,1945 ஜப்பானின்  நாகசாகி நகர் மீது  அமெரிக்கா   பேட் மேன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசியதில் 35,000 பேர் கொல்லப்பட்டனர். இது நாள் வரையிலும் இதுதான்...