ஏப்ரல் 3, 1773 ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த நாள் இன்று. இவருடைய தந்தை ஒரு விவசாயி தந்தையின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த முதல் பிள்ளை இவர். ஆரம்ப காலத்தில் உழவுத் தொழில்தான் செய்து வந்தார். 11 வயதில் தந்தையை இழந்த பின்பு தன் ஒன்றுவிட்ட அண்ணனிடம் வளர்ந்தார். அமெரிக்கா ஒரு காலத்தில் இங்கிலாந்து நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. அமெரிக்க விடுதலைக்காக போராடுகின்ற விடுதலைப் படைக்கு தலைமை தாங்கி போரிட்டு தன்னாட்டிற்கு வெற்றியும் தேடித் தந்தார். விடுதலை பெற்ற நாட்டிற்கு முதல் குடியரசுத் தலைவராக இருந்தவர் அவர். சிறிய வயதிலேயே அவர் அந்த நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என்று எண்ணினார். அவரது ஆசைப்படியே அவர் முயற்சி செய்தார். ஜனாதிபதியாகவும் ஆனார். போட்டியின்றி இரண்டு முறை அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வர்ஜீனியாவில் இன்று தான் பிறந்தார். ஏப்ரல் 3, 1981 ஒளவை.சு.துரைசாமிப்பிள்ளை மறைந்த தினம். ஒளவையார் குப்பம் என்ற தன் ஊர்ப்பெயரை தன் பேரோடு சேர்த்துவைத்துக்கொண்டதால் ஒளவை.சு.துரைசாமிப் பிள்ளை என்றே எல்லோராலும் அறியப்பட்டவர...