Skip to main content

Posts

Showing posts from January, 2025

பிப்ரவரி 1

  பிப்ரவரி 1, 1840  முதன்முதலாக பல் மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டது. இதன் பெயர் பால்டி மோர் பல் மருத்துவக் கல்லூரி. பிப்ரவரி 1, 1873 தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் இன்று தான் பிறந்தார். பிப்ரவரி 1, 1873  கடலியலின் தந்தை என்று கருதப்படும் அமெரிக்க கடலியலார் மாத்யூ போன்டைன் மௌரி இன்று காலமானார்.   பிப்ரவரி 1, 1876 தமிழறிஞர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மறைந்த தினம் .  பிப்ரவரி 1, 1884 20 ஆண்டுகால உழைப்பிற்குப் பின்பு இன்று ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது. 1864ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகள் இது தொகுக்கப்பட்டது.   பிப்ரவரி 1, 1893  நியூஜெர்மனியில் எடிசன் லேபரட்டரியில் முதல் சினிமா ஸ்டுடியோ ஆரம்பிக்கப்பட்டது. பிப்ரவரி 1,1903 நீர்ம இயக்கவியலில் ஸ்டோக்ஸ் விதியை அளித்த பிரிட்டிஷ் விஞ்ஞானி சர்.ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ் இன்று காலமானார். பிப்ரவரி 1,1925 பர்தோலியில் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பிப்ரவரி 1,1927  குழந்தைத் திருமண தடை மசோதாவை ஹர்பிலாஸ் சாரதா சமர்ப்பித்தார். இந்த மசோதா...

ஜனவரி 31

ஜனவரி 31, 1912   தமிழ் இலக்கிய உலகில் க.நா.சு என்று குறிப்பிடப்படும்  க.நா.சுப்ரமண்யம் பிறந்த நாள்.  இவரது ஆங்கிலப் படைப்புகள் வழியாகவே தமிழ் இலக்கியத்தின் பெருமை பிறமொழி  இலக்கிய ஆர்வலர்களையும் வாசகர்களையும் சென்றடைந்தது.   படைப்பாளராக மட்டுமன்றி சிறந்த  மொழிபெயர்ப்பாளராகவும் புகழ்பெற்றவர் இவர்.    ஜனவரி 31, 1928  ஒட்டுவதற்கு உதவும் ஒளி புகக்கூடிய தன்மையுடைய டேப் (adhesive tape) விற்பனைக்கு வந்தது. ஜனவரி 31, 1950   பிரபல கர்நாடக சங்கீத வித்துவான் டைகர் வரதாச்சாரியார் இன்று மறைந்தார்.   ஜனவரி 31, 1976  பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையை எதிர்த்ததைத் தொடர்ந்து கருணாநிதியின் தலைமையிலான திமுக மந்திரி  சபை பதவி நீக்கம் செய்யப்பட்டது.  தமிழ்நாட்டில் முதன்முதலாக ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. ஜனவரி 31, 1988   தமிழ் நாவலாசிரியர் அகிலன் மறைந்த நாள்.   அகிலன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. நாவல் ஆசிரியராக அறியப்பட்டாலும் சிறுகதையாளராக, நாடகாசிரியராக, மொழி பெயர்ப்பாளராக, கட...

ஜனவரி 30

ஜனவரி 30, 1874 வள்ளலார் நினைவு நாள். படிக்க வந்த மாணவர்கள் அமர்ந்திருக்க அந்தப் புதிய மாணவன் இராமலிங்கனும் ஓர் ஓரத்தில் உட்கார்ந்து கொள்கிறான். காஞ்சிபுரம் மகா வித்துவான் சபாபதி பாடம் நடத்தத்தொடங்கினார். ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்  ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்  மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்  வஞ்சனைகள் செய்வாரோடு  இணங்க வேண்டாம். என்று ஆசிரியர் சொல்ல, அனைவரும் திரும்பச் சொன்னார்கள். இராமலிங்கனை எழுப்பிக் கூறச்சொன்னார். வேண்டாம் எல்லாம் வேண்டும் என மாற்றி புதிய பாடல் பாட அனுமதி கேட்டான் அந்த மாணவன். ஆசிரியரும் அனுமத்தித்தார் .  "ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்" என்று தொடங்கி ஒரு பாடல் பாடினான் அந்த மாணவன்.  அந்த மாணவன் தான் இராமலிங்க வள்ளலார் என்று பின்னாளில் புகழ் பெற்ற வள்ளலார்.  ஜனவரி 30, 1910   இந்தியாவின் பசுமைப் புரட்சி மூலம் உணவு உற்பத்தியில்  தன்னிறைவுக்கு வித்திட்டவரான  சி. சுப்பிரமணியம் பிறந்த நாள்.  1998ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 7.11.2000 அன்று மறைந்தார...

ஜனவரி 29

  ஜனவரி 29, 1780  ஜேம்ஸ் அகஸ்ட் ஹிக்கே என்பவரால் 'த பெங்கால் கெசட் ' என்னும் வார இதழ் கல்கத்தாவில் துவங்கப்பட்டது. ஆங்கிலத்தில் வெளி வந்த இந்த இதழ் தான் இந்தியாவின் முதல் வார இதழாகும்.    ஜனவரி 29, 1915 பழம்பெரும் கர்நாடக சங்கீத வித்வான் வி. வி. சடகோபன் பிறந்த தினம்.  கர்நாடக சங்கீதத்தில் புகழ் பெற்ற பாடகராக விளங்கிய இவர் திரைப்பட நடிகராகவும் வலம்வந்தார்.  மதுரை காந்திகிராம் கிராமப் பல்கலைக்கழகத்தில் இசை இயக்குநராகவும், தில்லிப் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியராகவும் பணியாற்றிய இவர் இசையமைப்பாளராக, கவிஞராக, எழுத்தாளராக பல்துறை ஆளுமையாக இருந்தார்.   இவர் எப்படி மறைந்தார் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை. டெல்லியிலிருந்து ஆந்திராவின் குண்டூருக்கு ரயில் வந்து கிகுண்டூர் ரயில்நிலையத்தில் இறங்கிய பின் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. ஜனவரி 29, 1939  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காந்தியின் ஆசி பெற்ற பட்டாபி சீதாராமையாவை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார். பட்டாபி சீதாராமையாவின் தோல்வி என் தோல்வி...

ஜனவரி 28

28 ஜனவரி 1832  பிரிட்டிஷ்  இந்தியாவின் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியான  சர்.திருவாரூர் முத்துச்சாமி ஐயர்  பிறந்த நாள். பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் உச்சுவாடி எனும் கிராமத்தில் இன்று  பிறந்த அவர், 25 ஜனவரி 1895 அன்று மறைந்தார்.    ஜனவரி 28,  1848  அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பல் மருத்துவர் ஹோரேஸ்வெல்ஸ் என்பவர் 1845இல் வலி தெரியாமல் பல் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தார். அதை பாஸ்டனில் பிரபல அறுவை நிபுணர்கள் முன்னர் செய்து காட்ட முன்வந்த போது இன்றைய நாள் அவருக்கு துரதிஷ்டமாக அமைந்தது. பல்லை எடுப்பதற்காக வந்த ஒரு மாணவருக்கு வலி தெரியாமல் இருப்பதற்காக கொடுத்த மருந்தின் அளவு சரியில்லாமல் போய்விட்டது. அதனால் பல்லை எடுக்கும் போது வலியால் அந்த மாணவன் அலறிவிட்டான். இந்த த்  தோல்வியால் மனமுடைந்த அவர் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு சில்லறை விற்பனை செய்கின்ற கடை ஆரம்பித்து விட்டார்.  அதே நேரத்தில் இவரிடம் இருந்து இந்த முறையைத் தெரிந்து கொண்ட மார்டன் என்பவர் 1846 ஆம் ஆண்டு ஈதரைப் பயன்படுத்தி வெற்றி கண்டார். வெல்ஸ் இதற்கு உரிமை க...

ஜனவரி 27

  ஜனவரி 27, 1556  வெள்ளிக்கிழமை தொழுகைக்கான அழைப்பொலி கேட்டதும் செங்குத்தான படிகளில் அவசரமாக இறங்கி வரும் போது கீழே விழுந்து மொகலாய மன்னன் ஹுமாயூன் மரணம் அடைந்தார்.   ஜனவரி 27, 1935 திரைப்பட இயக்குநர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என்ற பல முகங்களைக் கொண்ட கோமல் சுவாமிநாதன்  பிறந்த நாள்.  பாலச்சந்தரால் இயக்கப் பெற்ற தண்ணீர் தண்ணீர் என்ற  சாதனைபடைத்த  திரைப்படம்  இவரது  எழுத்தில் பிறந்த கதை தான்.   ஜனவரி 27, 1945 தமிழ்க்கடல் என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர் பட்டிமன்றப் பேச்சாளர் நெல்லை கண்ணன் பிறந்த நாள் .     ஜனவரி 27, 1946 நாட்டுப்புறப் பாடல்களை வெகுஜனப் பாடல்களாக மாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரரான விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பிறந்த நாள்.  தமிழ் நாட்டுப்புறப் பாடல்களை உயிர்ப்பிக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதில் சாதித்தவர் இந்தப் பேராசிரியர்.   ஜனவரி 27,  2009   இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மறைந்த நாள்.  இவர் பதவியிலிருந்த 1987 முதல் 1992 வரைய...

ஜனவரி 26

  ஜனவரி 26, 1530  முதலாம் பானிபட் போரில் இப்ராஹிம் லோடியை தோற்கடித்து டெல்லியை கைப்பற்றியவர் பாபர். அவர் இன்று இறந்தார். ஜனவரி 26,1862  இந்தியாவில் தபால் தந்தி முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஜனவரி 26,1924 கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஆகிய நாவல்களைப் படித்தவர்களுக்கு அதில் வரும் அந்த கதாபாத்திரங்களின்  ஓவியங்களையும் நினைவில் இருக்கும்.   வாசகர்களின் மனதில் நிலைக்குமாறு அந்த ஓவியங்களை  வரைந்த  மணியம் என்ற  டி. யூ. சுப்பிரமணியம்  பிறந்த நாள் இன்று.  ’பொன்னியின் செல்வன்’ நூலின் முன்னுரையில் இராஜாஜி, ஓவியர் மணியத்தின் ஓவியங்கள் நல்லவர்களையும் திருடத் தூண்டும் அளவு சிறப்பாக உள்ளதால், நூல்களை பத்திரமாக பாதுகாக்கும்படி நூலகர்களை நகைச்சுவையாக அறிவுறுத்தியிருப்பார். அது மணியத்தின் ஓவியங்களை இராஜாஜி  எவ்வளவு  ரசித்திருப்பார் என்பதை விளக்கும்.  ஜனவரி 26, 1941   கல்கத்தாவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தப்பிச்சென்றார். ஜனவரி 26, 1950  இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த...

ஜனவரி 25

  ஜனவரி 25, 1736   உலகமெங்கும் புகழ்பெற்ற கணிதம் மற்றும் இயற்பியல் படங்களில் வரும்   லாக்ராஞ்சியின் தேற்றத்தை உருவாக்கிய ஜோசப் லூயி லாக்ராஞ்சி இன்று பிறந்தார்.   இருபது வயதுக்குள்ளேயே கணிதத்தில் சாதனை படைத்தவர் இவர் . எல்லோரும் செல்வச்செழிப்பில் வாழவேண்டும் என்று விரும்புவோம்.   ஆனால் இவரோ வித்தியாசமானவர். " வசதியில்லாத தாய் தந்தையருக்கு 11-வது குழந்தையாகப் பிறந்ததால்  தான் தன்னால் கணக்குப் பாடம் படிக்க முடிந்தது.  நான் பெரிய சொத்துக்கு வாரிசாகியிருந்தால் ஒருவேளை கணித உலகிற்குள் நுழையாமல் இருந்திருக்கக்கூடும் " என தன்னை இப்படி வசதியில்லாத குடும்பத்தில் படைத்தற்காக கடவுளுக்கு நன்றி சொன்னவர் இவர்.  ஜனவரி 25, 1885 அகில உலக ஆக்கி போட்டி ரைல் என்னுமிடத்தில் நடந்தது. இந்த போட்டியில் அயர்லாந்து அணி வேல்ஸை வென்றது. ஜனவரி 25, 1895 பிரிட்டிஷ்  இந்தியாவின் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியான  சர்.திருவாரூர் முத்துச்சாமி ஐயர்  மறைந்தது  இன்றுதான். முத்துச்சாமி அய்யர், பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் உச்சுவாடி எனும்...

ஜனவரி 24

  ஜனவரி 24, 1950  சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக பாபு ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஜனவரி24,1950  இந்தியாவின் தேசிய கீதமாக ஜன கன மன அறிவிக்கப்பட்டது. ஜனவரி 24,1965   உலகப் புகழ்பெற்ற முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் காலமானார். ஜனவரி 24, 1966 இந்திய அணு ஆற்றல் கமிஷன் தலைவரான டாக்டர் ஹோமி பாபா சென்று கொண்டிருந்த விமானம் மத்திய ஐரோப்பாவில் ஆல்ப்ஸ் மலையில் மோதிச் சிதறியதில் அவர் உயிரிழந்தார். அறிவியல் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் இவர். ஜனவரி 24, 2015 பழம்பெரும் நடிகர் வி. எஸ். ராகவன் மறைந்த தினம்.  ஜனவரி 1, 1925  அன்று பிறந்த அவர் இன்று மறைந்தார்.  தமிழ் நாடக நடிகராக வாழ்க்கைத் தொடங்கி  திரைப்பட, தொலைக்காட்சி  நடிகராகவும் திரைப்பட இயக்குனராகவும் புகழ்பெற்றவர்.  ஆரம்ப காலத்தில்  கே. பாலசந்தர் இயக்கிய பல மேடை நாடகங்களில்  இவர் நடித்தார். மொத்தம் 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.    

ஜனவரி 23

  ஜனவரி 23, 1810  மின்பகுப்பு முறையில் ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் முதன் முதலில் பகுத்துக் காட்டிய ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானி வில்ஹெல்ம் ஜோஹன்ரிடர் இன்று காலமானார். ஜனவரி 23,1836  குரோமோசோம், நியூரான் என்னும் இரண்டு அடிப்படை அறிவியல் கலைச்சொற்களைத் தந்த ஜெர்மனியை சார்ந்த ஹென்ரிச் வில்ஹெல்ம் வால்டெயர் ஹார்ட்ஸ் இன்று காலமானார். ஜனவரி 23,1897  தேசப்பற்றுடைய ஒவ்வொருவரும்  அறிந்திருக்கவேண்டிய தலைவர்  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள். ஜனவரி 23,1901  செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தியை அச்சிடுவது என்ற பழக்கம் இன்றுதான் துவங்கியது. விக்டோரியா மகாராணியின் மரணச் செய்தியை டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற நாளிதழ் இப்படி வெளியிட்டது. ஜனவரி 23,1924  லெனின் ஜனவரி 21 ஆம் தேதி இறந்து விட்டார் என்று இன்று  சோவியத் யூனியன் (ரஷ்யா) அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஜனவரி 23,1926   பால் தாக்ரே என்று பிரபலமாக அறியப்படும் பால சாஹேப் கேஷவ் தாக்கரே பிறந்த நாள். மகாராஷ்டிரா மாநிலத்தில்  சிவ சேனா என்னும் ஒரு பிரபலமான, இந்து தேசியக் கட்சிய...

ஜனவரி 22

ஜனவரி 22, 1926     தமிழ்நூற்கடல் என அழைக்கப்பட்ட தி. வே. கோபாலையர் பிறந்த நாள்.  தமிழ், பிரெஞ்சு, சமஸ்கிருதம், ஆங்கிலம் முதலான மொழிகளில் புலமை பெற்றவர் இவர்.  இலக்கணம், இலக்கியம், வைணவ இலக்கியங்களில் ஆழமான அறிவும் ஈடுபடும் கொண்டிருந்தவர் . தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் வழியாக பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். பல நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார். ஜனவரி 22, 1927   உலகின் முதல் வானொலி வழியாக விளையாட்டின் நேர்முக வர்ணனை இன்று தான் முதல் முதலாக ஒளிபரப்பானது. முதல் விளையாட்டு வர்ணனை ஹைபரியில் நடைபெற்ற ஆர்சனல்-செப்பீல்ட் யுனைடெட் கால்பந்து போட்டியை நேரலையில் ஒலிபரப்பாகியது ஜனவரி 22, 1992   மறைந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அபுல் கலாம் ஆசாத் ஆகியோர் நாட்டிற்குச் செய்த தொண்டுகளை நினைவூட்டும் வகையில் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனால் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

ஜனவரி 21

  ஜனவரி 21, 1895 தென்னிந்தியாவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்திய நீதிபதியான சர். முத்துசாமி ஐயர் இன்று காலமானார்.   ஜனவரி 21,1922  கோயம்புத்தூரில் உள்ள டவுன் ஹாலை தன் சொந்தச் செலவில் கட்டி அதை அரசுக்குக் கொடுத்த நரசிம்ம நாயுடு இன்று மறைந்தார். இவர் 'சுதேச அபிமானி' என்னும் இதழைத் தொடங்கி ஏழைகள் படும் துயரையும் அரசு ஊழியர்கள் ஏழைகளுக்கு இழைக்கும் கொடுமைகளையும் பற்றி எழுதி வந்தவர். 94 நூல்களுக்கு மேல் எழுதிய இவர் ஆங்கில அரசாங்கம் தந்த ராவ் பகதூர் பட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டவர்.  ஜனவரி 21,1972  மேகாலயா மாநிலம் உருவானது. அஸ்ஸாமின் மலைப்பகுதி மாவட்டங்களைப் பிரித்து இம் மாநிலம் உருவாக்கப்பட்டது. உலகிலேயே அதிக மழை பொழியும் இடமாக இருந்த சிரபுஞ்சி இந்த மாநிலத்தில் தான் உள்ளது. ஷில்லாங் இந்த மாநிலத்தின் தலைநகர். ஜனவரி 21, 2002 வீடு -  பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்து பெரிதும் பேசப்பட்ட ஒரு  ஆழமான திரைப்படம்.  அதில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் கே. ஏ. சொக்கலிங்க பாகவதர்.   பழம்பெரும் தமிழ்த்...

ஜனவரி 20

  ஜனவரி 20,  1775  மின்சாரத்தைப் பற்றிப் பேசும்போது ஆம்பியர் (Ampere) என்ற சொல்  கூடவே வரும். பிரான்ஸ் நாட்டின் இயற்பியலாளரும், மின்காந்தவியல் (Electrodynamics) பிரிவைக் கண்டறிந்தவர்களில் ஒருவருமான ஆந்த்ரே-மரி ஆம்பியர் (Andre-Marie Ampere) பிறந்த தினம் 1775 ஜனவரி 20.  பிரான்சின் லியோன் என்ற பகுதியில் பிறந்தார் (1775). தந்தை, வெற்றிகரமான வியாபாரி. தன் மகனுக்கு லத்தீன் கற்றுத் தந்தார். மிகவும் அறிவுக் கூர்மைமிக்க இந்தச் சிறுவனுக்குள் கட்டுக்கடங்காத அறிவு தாகம் ஊற்றெடுத்தது.  ஒரு கலைக்களஞ்சியத்தின் ஒட்டுமொத்த பக்கங்களையும் மனப்பாடமாகக் கற்றுத் தேர்ந்தான், 13-வது வயதில் கணிதத்தில் அளவு கடந்த ஆர்வம் பிறந்தது.  பிரபல கணிதவியல் அறிஞர்கள் லத்தீன் மொழியில் எழுதிய நூல்களைப் படிக்க ஏதுவாக லத்தீன் கல்வியையே தொடர்ந்தார்.  அப்போதே ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதி, ஒரு கணித அகாடமிக்கு அனுப்பினார். அது ஏற்றுக்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதால் மேலும் தீவிரமாகக் கணிதம் கற்றார்.  சிறந்த கணித ஆசிரியரிடமும் அனுப்பிவைத்து, மகனின் கணித ஞானத்தைப் பட்டை தீட்டினார் ...

ஜனவரி 19

  ஜனவரி 19 , 1597  அக்பரின் மொகலாயப் படையைக் கதிகலங்க வைத்த மேவார் மன்னன் மகாராணா பிரதாப் இன்று மரணம் அடைந்தார்.   ஜனவரி 19 , 1736 நீராவி இயந்திரம் என்ற வார்த்தையோடு  நினைவுக்கு வரும் விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்  பிறந்த தினம். இவரது கண்டுபிடிப்பு தான் உலகில்  தொழிற்புரட்சிக்கு அடிப்படையாக  அமைந்தது.    ஜனவரி 19 , 1855 மகாகவி பாரதியாரின் வாழ்க்கையோடு தொடர்புடையவரான ஜி. சுப்பிரமணிய ஐயர் பிறந்த நாள்.  இவரது முழுப்பெயர் கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய ஐயர்.  1878 செப்டம்பர் 20 அன்று தி இந்து என்ற செய்தி இதழை நிறுவி 1898 வரை அதன் உரிமையாளராகவும், மேலாண்மை இயக்குநராகவும், பதிப்பாளராகவும் இருந்தவர் இவர். சுதேசமித்திரன் என்ற தமிழ் வார இதழையும் இவர் தொடங்கினார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இவர்.    ஜனவரி 19 , 1898   புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர்  வி. எஸ். காண்டேகர்   பிறந்த நாள்.    ஞானபீட விருது பெற்ற முதல் மராட்டிய எழுத்தாளர் இவர் தான்.  இவரது பல நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதால் தமிழ் வாசகர்...

ஜனவரி 18

  ஜனவரி 18,1927  டெல்லியில் பாராளுமன்ற கட்டிடம் கவர்னர் ஜெனரல் இர்வினால் திறந்து வைக்கப்பட்டது.  1921 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.  (இப்போதுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடம் அல்ல. இது 2023 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது). ஜனவரி 18, 1927   வீணை எஸ். பாலச்சந்தர் பிறந்த தினம்.  குரு என்று எவருமில்லாமலே தாமே வீணை இசை கற்று அதில் நிபுணத்துவம் பெற்ற மேதை இவர்.  தமிழ்த் திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் பெயர் பெற்றவர். தான் இயக்கிய திரைப்படங்களுக்கு தாமே இசையமைக்கவும் செய்தார். ஜனவரி 18, 1951 கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆத்மாநாம் சென்னையில் இன்று பிறந்தார். இவரது இயற்பெயர் எஸ்.கே.மதுசூதன்.  கவிதை எழுதுவதோடு   ஃப்ரெஞ்ச் மற்றும் லத்தின் அமெரிக்க மொழிக் கவிதைகளையும்  மொழிபெயர்த்து எழுதியுள்ளார். இளம்வயதிலேயே மனச்சிதைவு நோய்க்கு ஆளாகி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்கொலை  செய்து கொண்டார்.  2002-ல் காலச்சுவடு வெளியீடாக ஆத்மாநாம் எழுதிய 156 கவிதைகள் ஒரு தொகுப...

ஜனவரி 17

  ஜனவரி 17, 1691 ரத்தத்தில் ஏதோ ஒன்றை சேர்ப்பதற்காகத்தான் சுவாசித்தல் நடைபெறுகிறது என்று முதன் முதலில் கண்டுபிடித்தவர் பிரிட்டனைச் சார்ந்த ரிச்சர்ட் லோயர் என்ற ஒரு மருத்துவர் அறிஞர் . இவர் தான் முதன்முதலாக ரத்தத்தை மாற்றுவதற்கு முயன்றவர். அவர் இன்று லண்டனில் காலமானார். ஜனவரி 17,1705  தாவர வகைகளைப் பற்றி மூன்று தொகுதிகள் கொண்ட ஹிஸ்டாரிக்கா பிளான்ட்ரம் HISTORICA PLANTRUM என்னும் கலைக்களஞ்சியத்தை எழுதிய பிரிட்டனைச் சேர்ந்த ஜான்ரே இன்று காலமானார். ஜனவரி 17,1706   பெஞ்சமின் பிராங்கிளின் பிறந்த தினம்.  ஒரு  விஞ்ஞானி எழுத்தாளராக அரசியல்வாதியாக   இலக்கியவாதியாக வியாபாரியாகவெல்லாம் இருக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டான மனிதர் இவர்.   இன்றைய  அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் இவரும் ஒருவர்.  அறிவியல் பாடத்திலும் அமெரிக்க வரலாற்றிலும் இடம்பெற்ற ஒரு புகழ்பெற்ற பெயர் பெஞ்சமின் பிராங்கிளின். ஜனவரி 17,1978  நம் நாட்டில் ஆயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. ஜனவரி 17,1917  தமிழக முன்னாள் முதல்வர் ...

ஜனவரி 16

  ஜனவரி 16, 1681  மராட்டிய சிங்கம் என்றும் மலை எலி என்றும் புகழ் பெற்ற வீர சிவாஜியின் மகன் சாம்பாஜி இன்று முடி சூட்டிக்கொண்டார். ஜனவரி 16, 1920 நானி பல்கிவாலாபிறந்த தினம்.  வழக்கறிஞர், இந்திய அரசியல்சட்ட நிபுணர், பொருளியல் அறிஞர், கல்வியாளர், இந்திய வரவு செலவுத்திட்ட ஆய்வாளர் என பலவாறு அறியப்பட்டவர் இவர். மொரார்சி தேசாய் பிரதமராக இருந்தபோது 1977 ஆம் ஆண்டில் இந்திய அரசு நானி பல்கிவாலா  அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்தார்.  ஜனவரி 16, 1978 பிரபல திரைப்பட இயக்குனர் ஏ.பீம்சிங் காலமானார். ஜனவரி 16, 2003   கொலம்பியா விண்வெளி ஓடம் இன்று  தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது.  கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 விண்வெளி வீரர்களுடன் இன்று புறப்பட்டது. 16 நாட்களுக்குப்  பின் பூமிக்குத் திரும்புகையில் வெடித்துச் சிதறியது. 

ஜனவரி 15

ஜனவரி 15,1841 முல்லைப்   பெரியாறு அணையைக்  கட்டி முடித்த ஜான் பென்னிகுவிக் பிறந்த நாள். ஜனவரி 15,1892 டாக்டர் ஹெய்ஸ்மித் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட (Basketball) கூடைப்பந்தாட்டம் என்னும் புதிய விளையாட்டின் விதிமுறைகள் Triangle என்னும் பத்திரிகையில் வெளிவந்தது. ஜனவரி 15,1892 மயிலை சிவ. முத்து என்னும் பேராசிரியர் மயிலாப்பூர் சிவானந்த முத்துக்குமாரசாமி பிறந்த நாள்.  இசைப்பாடகர், எழுத்தாளர், குழந்தைக் கவிஞர், இதழாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் இவர். ஜனவரி 15,1917 நகைச்சுவை  நடிகர். டணால் தங்கவேலு  பிறந்த நாள்.  இவரது உண்மையான பெயர் கா. அ. தங்கவேலு. 1950 முதல் 1970 வரை தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை  நடிகராக வலம்வந்தவர்.  சிவாஜி கணேசன் மற்றும் பத்மினியுடன் இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள் படம் இவர் பெரும்புகழ் பெற முக்கியமான காரணம். ஜனவரி 15,1949 ஜெனரல் கே. எம்.கரியப்பா இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பதவியேற்றார். இப்பதவிக்கு வந்த முதல் இந்தியர் இவரே. எனவே இந்த நாள் படையினர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15,1965 ...

ஜனவரி 14

  ஜனவரி 14 ,1898  Alice in Wonderland ஆலீசின் அற்புத உலகம் என்னும் புகழ்பெற்ற குழந்தைகள் இலக்கியத்தை எழுதிய லூயி கரோல் என்று அழைக்கப்படும் சார்லஸ் டாட்ஜன் இன்று மறைந்தார். ஜனவரி 14 ,1917 தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் பிறந்த நாள்.  ஜனவரி 14 ,1938 நகைச்சுவை நடிகர் சுருளி ராஜன் பிறந்த நாள்.  ஜனவரி 14 ,1981 தேவநேயப்  பாவாணர்  மறைந்த நாள்.  ஜனவரி 14 ,1986  இந்தியாவின் முதல் தலைமைத் தளபதியான கே.எம்.கரியப்பாவிற்கு ஃபீல்டு மார்ஷல் பதவி அளிக்கப்பட்டது. ஜனவரி 14 , 2000   சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் மறைந்த நாள். 

ஜனவரி 13

ஜனவரி 13.  1879 பன்னாட்டு அரிமா சங்கங்களின் (Lions Club) நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் பிறந்த நாள்.   ஜனவரி 13. 1911  முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆரின் மூத்த சகோதரர் எம். ஜி. சக்கரபாணி பிறந்த நாள்.  இவர் அந்தக் காலத்தில் புகழ்பெற்ற நாடக மற்றும்  திரைப்பட நடிகராவார்.  ஜனவரி 13.1921  மழை பெய்யும் போது காரின் முகப்பு கண்ணாடியில் வழியும் மழைத் நீரைத் துடைத்துவிடும் வின்ஸ்கிரீன் வைப்பர் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.   ஜனவரி 13.1921    பழம்பெரும் திரைப்பட நடிகை அஞ்சலிதேவி மறைந்த நாள்.  லவகுசா திரைப்படத்தில் சீதையாக நடித்தவர் இவர்.   ஜனவரி 13.1949   விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் ஷர்மா பிறந்த தினம்.   பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் பிறந்தவர்.  7 நாள் 21 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்.

ஜனவரி 12

ஜனவரி 12, 1863 சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள். உடல், மனம், தேசம், தெய்வம், மனித நேயம் என்று பக்தியின் வீச்சைப் பல நிலைகளுக்கு விரிவுபடுத்தியவர்.  அவர் பிறந்த இந்த நாள்  இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 12,  1917   ஆழ்நிலை தியானத்தை உலகமெங்கும் கற்றுத் தந்த மகரிஷி மகேஷ் யோகி பிறந்த நாள். இந்தியா மட்டுமன்றி  அமெரிக்கா, மெக்சிக்கோ, சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியான மையங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன .   ஜனவரி 12, 1967 1967 எம் ஜி ராமச்சந்திரன் அவரது ராமாவரம் தோட்டத்தில் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார். குண்டு அவரது இடதுபுறக் காது அருகே கன்னத்தில் பாய்ந்தது. எம்.ஆர்.ராதா தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இருவரும் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஜனவரி 12, 1976 1976 துப்பறியும் நாவல்களை எழுதி ப்  புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் அகதா கிறிஸ்டி இன்று காலமானார். ஜனவரி 12, 1992 1992 போலியோ வராமல் தடுக்க வாய் வழி மருந்தைக் கண்டுபிடித்த டாக்டர் ஹெர்கார்ட் இன்று நியூயார்க்கில் காலமானார். ஜனவரி ...