24 டிசம்பர் 1582
லண்டனில் இன்று முதன்முதலாக குழாய் மூலம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டது.
24 டிசம்பர்1912
வ. உ. சிதம்பரம்பிள்ளை இன்று சிறையிலிருந்து விடுதலையானார். சிறை வாசலில் அவரை வரவேற்க காத்திருந்தவர்கள் அவரது மனைவி, மகன்கள், சுவாமி வள்ளிநாயகம், கணபதி, சுப்ரமணிய சிவா ஆகியோர் மட்டுமே.
24 டிசம்பர்1921
வேல்ஸ் இளவரசர் இன்று கல்கத்தாவிற்கு வருகை புரிந்தார். அவரது வருகையை எதிர்த்து நகரில் பொது ஹர்த்தால் நடந்தது. ஒருவரும் பணிக்கு வராததால் ஐரோப்பிய நிறுவனங்களும் அலுவலகங்களும் தங்களது அலுவலகங்களை மூட வேண்டியதாயிற்று
24 டிசம்பர்1973
பெரியார் என்கிற ஈ.வே.ராமசாமி காலமானார்.
24 டிசம்பர்1987
தமிழ்நாட்டின் முதல்வராக 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்த எம்.ஜி.ராமச்சந்திரன் காலமானார்.
24 டிசம்பர்1989
நாட்டின் முதல் பொழுதுபோக்கு பூங்கா எஸ் எல் வேர்ல்ட் பம்பாயில் திறந்து வைக்கப்பட்டது
*****
ஆர்டிக் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24ஆம் தேதி 24 மணி நேரமும் இரவாகவே இருக்கும்.

Comments
Post a Comment
Your feedback