புத்தம் புது பூக்கள். பூத்த வாசம் மாறாமல் அவள் கூந்தலுக்கு வந்துவிட்டன. பூ வாசத்தை தேடி செடியென நினைத்து முகவரி தெரியாமல் வந்துவிட்டதால் அவள் கூந்தலில் வண்டுகள் அலை மோதுகின்றன.
கெண்டை மீன் போலத் தோன்றுகின்றன அவள் கண்கள். அது கண்ணா மீனா என்று
தடுமாற்றம்.
அழகான அவள் குரல் கேட்டால் அது அவள் மொழியா அல்லது கிளி மொழியா என்று
குழப்பம்.
அவள் வாயில் ஊறுவது கற்கண்டா தேனா கனியைப் பிழிந்தெடுத்த சாறா? அமுதா?.
அது அமுதம் என்றால் அதை முனிவர்களுக்கும் கூடக் கொடுக்கலாமா?
காதல் வியாதி முத்திப் போனால் இப்படி எல்லாம் தோன்றுமா?
வண்டு மொய்த்தனைய கூந்தல் மதன பண்டாரவல்லி
கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளிமொழி வாயின் ஊறல்
கண்டு சர்க்கரையோ தேனோ கனியடு கலந்த பாகோ
அண்டர் மாமுனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே!
Comments
Post a Comment
Your feedback