11 டிசம்பர் 1687
கிழக்கிந்தியக் கம்பெனிக்கு சென்னையில் நகராட்சி அமைக்க 1686 ஆம் ஆண்டு அரசு பட்டயம் அனுமதி அளித்தது. அதன்படி சென்னை மாநகராட்சி இன்று அமைக்கப்பட்டது.
11 டிசம்பர் 1858
கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இருந்து முதல் பட்டதாரிகளாக பங்கிங் சந்திரசட்டோ பாத்தியாயமும் ஜாதுநாத் போசும் பட்டம் பெற்றனர்.
11 டிசம்பர் 1882
மகாகவி பாரதியார் பிறந்த நாள்.
11 டிசம்பர்1941
பிரபலிங்க லீலைக்கு குறிப்புரை தந்த கு.சோமசுந்தர தேசிகர் காலமானார்
11 டிசம்பர்1946
ராஜேந்திர பிரசாத் இந்திய அரசியல் சட்ட சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
11 டிசம்பர்1958
பியூரி என்னும் கப்பல் 1823 ஆம் ஆண்டு கனடா அருகில் கடலில் மூழ்கியது.
இன்று அந்தக் கப்பல் வெளியே எடுக்கப்பட்டது.
அந்தக் கப்பலில் இறைச்சி அடைத்து வைக்கப்பட்டிருந்த டப்பா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 135 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த இறைச்சி கொஞ்சம் கூட கெடாமல் அப்படியே இருந்தது.
11 டிசம்பர் 2004
கர்நாடக இசைப் பாடகி M.S. சுப்புலட்சுமி மறைந்த நாள்.
11 டிசம்பர் 2012
சிதார் இசைக்கலைஞர் பண்டிட் ரவி சங்கர் மறைந்த நாள்.
இந்திய இசையை மேலைநாடுகளுக்குக் கொண்டு சென்றதில் இவரது பங்கு முக்கியமானது.

Comments
Post a Comment
Your feedback