Skip to main content

இன்னுமொரு வானம்


இந்த நாட்கள் இப்படியே போய்விடாது. நமக்கான நாட்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. 

எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் 'இனிய தருணங்கள் இனி வரப்போகின்றன' என்ற ஆழமான எண்ணம் தான் வாழ்க்கையை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. 

மழையே இல்லாமல் வறண்ட பூமியில் காய்ந்து சருகாகிப் போன புல்லை அற்பமாக நினைக்க முடியாது. சின்னதாக ஒரு  மழை வந்தாலே போதும். வறண்ட அந்தப் புல் துளிர்க்கும்.  அதில் குட்டிக் குட்டியாக சில பூக்களும் தலைகாட்டும். 

காய்ந்து கிடந்த பூமியில் சருகாகக் கிடந்த புல்லைப் பார்க்கும்போதே நாளைக்கு அது பூவோடு பூரித்து நிற்கும் அழகைப் பார்க்கத் தெரிந்து கொண்டால் அது தான் வாழ்க்கை.

எல்லையில்லாத தூரத்தில் சூரிய வெளிச்சம் எட்டாத தூரத்தில் கூட  சூரியன் இருக்கிறது தானே. இங்கிருந்து பார்க்கும்போது வெளிச்சம் மறைந்திருப்பதை இருட்டாக நினைத்துக்கொள்கிறோம்.

இந்த நாள் இப்படியே நீளாதா என்று சின்ன சந்தோஷத்துக்குப் பெரிதாக ஏங்குகிறோம். இனி வரும் நாட்களில் எத்தனை பெரிய சந்தோஷங்கள் ஒளிந்திருக்கின்றன என்று தெரியாததால்.

பசுமை மாறாத சிறிய இடத்தைப் பார்க்கிறோம். பசுமை ஆகப்போகும் அகண்ட நிலத்தை அறியாமலேயே...

தன் சகோதரனுக்கு எழுதிய கடிதம் போன்ற நடையில் அமைந்த ஒரு Sonnet   இது.

வாழ்க்கை அழகானது. அந்த அழகு இப்போது நம் கண்களுக்குத் தெரியாத போதும்... இனி வரும் அழகை  நினைத்துப் பார்க்கத் தெரியாதவர்களுக்கும் கூட அந்த அழகிய நாட்கள் வரத்தானே போகின்றன.

இது தான் இந்தப் பாட்டின் theme. 

எந்த ஒரு கஷ்டமான சொல்லும் இல்லாத ஒரு எளிமையான ஆங்கிலக் கவிதை இது.


There is another sky

There is another sky,

Ever serene and fair,

And there is another sunshine,

Though it be darkness there;

Never mind faded forests, Austin,

Never mind silent fields -

Here is a little forest,

Whose leaf is ever green;

Here is a brighter garden,

Where not a frost has been;

In its unfading flowers

I hear the bright bee hum:

Prithee, my brother,

Into my garden come!

- Emily Dickinson

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...