செல்வ முத்துக் குமரனவன்- தமிழ்த்
தெய்வமாகிய முருகன் அவன்.
உள்ளம் கவர்ந்த கள்வனவன்-என்
உயிரில் கலந்த கந்தன் குகன்.
என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடலைக் கேட்டிருப்போம்.
உள்ளத்தைத் திருடிய கள்வன் என்று பக்தி, ஒரு உரிமையோடு காட்டப்படும்.
கடவுளையே கள்வனாகக் காண்பதெல்லாம் அதீத அன்பால் பக்தியால் வந்தது என்று சொல்லுவார்கள்.
கடவுளை மட்டுமல்ல கணவனை, காதலனையெல்லாம் கூட கள்வனாகக் காணும் பார்வை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்த தமிழ் மரபு.
"யாருமில்லை தானே கள்வன்"
என்பது ஒரு குறுந்தொகைப் பாடல் அடி.
உண்மையில் தமிழ்ப் பெண்கள் மட்டுமல்ல; எல்லாப் பெண்களும் இப்படிக் கணவனையோ காதலனையோ "கள்வன்" ஆக்கிப் பார்த்து மகிழ்ந்து பாடியிருக்கிறார்கள் போல.
மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் இடையே இருக்கும் மைக்கால் (Maikal) மலைகளில் வாழும் பழங்குடிகள் கூட அப்படித்தான்.
அவர்களின் ஒரு காதல் பாடல் இது.
நள்ளிரவில் நாய்கள் குரைக்கின்றன
விண்மீன்கள் வானுக்கு வந்துவிட்டன
இலை நீண்டவை அந்த இளம்பச்சை மூங்கில்கள்
அவையூடே என் கள்வன் வருகிறான்.
நள்ளிரவில் நாய்கள் குரைக்கின்றன.
At midnight the dogs are barking
The stars have come into the sky
Long are the leaves of the young bamboos
And breaking through them come my thief
At midnight the dogs are barking.
(Love songs of Maikal Hills)
Comments
Post a Comment
Your feedback