துளி துளியாய் மழை விழுகிறது
ஒரு வாரமாய் ஏமாற்றிய மேகங்கள்
வேகமாக உருகுகின்றன
கொட்டிக் கவிழ்த்த வெள்ளத்தில்
முற்றத்துச் செடி
சிறகசைக்கிறது பறக்கப் போவது போல.
கோடையின் காயங்களுக்கு
வீசும் காற்று மருந்து தடவுகிறது
நிலத்தோடு போகும் நீரோட்டம்
புற்களோடு பேசிக்கொண்டு போகிறது.
சோர்வும் வருத்தமும் மிக்க பயணங்கள்
களைப்பு எரிச்சல் வெப்பம்
எல்லாம் மேகத்தின் ஸ்பரிசத்தில் மறைகின்றன.
கொந்தளிக்கும் பருவ காலங்களில்
இயற்கையும் மனிதனும் ஒன்றாகும் தருணம்
ஒரு காதலைப் போல் மழை பூக்கிறது.
இணையும் இசையின் அரங்கத்தில்
குடைக்கு என்ன வேலை?
சற்றே மழையில் நனைகிறேனே.
(காலத்தை உறங்க விடமாட்டேன் கவிதைத் தொகுப்பு- சாகித்திய அகாதெமி விருது பெற்ற தெலுங்குக் கவிதை)
தெலுங்கிலிருந்து தமிழில் : சிற்பி பாலசுப்பிரமணியம்
தெலுங்கு மூலம்: கோபி
Comments
Post a Comment
Your feedback