18 டிசம்பர் 1398
தைமூர் டெல்லியை கைப்பற்றி சூறையாடினான்.
18 டிசம்பர் 1822
நல்லூர் ஆறுமுக நாவலர் பிறந்த நாள்.
ஆறுமுக நாவலர் தமிழ், ஆங்கிலம், வடமொழிகளில் திறம் பெற்றவர். யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.
பாதிரியார் பீட்டர் பெர்சிவல் பைபிளை தமிழில் மொழிமாற்றம் செய்ய இவரிடம் கோரினார். இப்பணிக்கு ஆறுமுக நாவலரே தகுதியுடையவர் என்று அவர் தீர்மானித்தார்.
சைவ சிந்தாந்தத்தில் கைதேர்ந்த ஆறுமுக நாவலரின் பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு அறிஞர்களை வியப்புறச் செய்தது.
தொல்காப்பியம், நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்களை அச்சேற்றியவர் ஆறுமுக நாவலர்.
நல்லை நகர் ஆறுமுகநாவலர் பிறக்கிலரேல்
சொல்லும் தமிழ்எங்கே !
(ஆறுமுக நாவலர் பற்றி சி.வை. தாமோதரனார் )
18 டிசம்பர் 1932
எழுத்தாளர் தீபம் நா.பார்த்தசாரதி பிறந்த நாள்.
தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்ற அடைமொழியுடன் அறிமுகமானவர் இவர்.
18 டிசம்பர் 1988
தமிழ் இலக்கிய உலகில் க.நா.சு என்று குறிப்பிடப்படும் க. நா. சுப்ரமண்யம் மறைந்த நாள்.
இவரது ஆங்கிலப் படைப்புகள் வழியாகவே தமிழ் இலக்கியத்தின் பெருமை பிறமொழி வாசகர்களையும் இலக்கிய ஆர்வலர்களையும் சென்றடைந்தது. படைப்பாளராக மட்டுமன்றி சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் புகழ்பெற்றவர் இவர்.
18 டிசம்பர் 1998
தமிழ் இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையான சி.சு.செல்லப்பா மறைந்த தினம்.
'எழுத்து' என்ற பத்திரிக்கையினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கியம், பழமைக்கு மட்டுமல்லாது நவீனத்துக்கும் ஒரு தளம் என்பதை தன்னுடைய எழுத்தின் மூலம் நிரூபித்தவர் இவர்.

Comments
Post a Comment
Your feedback