10 டிசம்பர்
1810
கிழக்கு இந்திய கம்பெனி நிர்வாகம் காசியில் வீட்டு வரி விதித்தது. இதை எதிர்த்து அந்த நகர மக்கள் புதிய முறையில் போராட்டம் நடத்த தொடங்கினர். அந்த நகர மக்கள் நிர்வாகத்திற்கு வரிவிதிக்க வேண்டாம் என்று ஊர்வலமாகச் சென்று மனு கொடுத்தனர். அத்துடன் கடைக்காரர்களும் வர்த்தகர்களும் கடைகளை அடைத்து விட்டு மக்களோடு சேர்ந்து ஊர்வலமாகச் சென்று மாவட்ட நீதிபதியிடம் வரியை நீக்க கோரி மனு கொடுத்தனர்.
1811 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி வரை முப்பது நாட்கள் அமைதியாக நடந்த இந்த போராட்டம் முடிவில் வெற்றி பெற்றது. இந்த புதிய முறை போராட்டம் தான் பின்னாளில் ஹர்த்தால் என்று பெயர் பெற்றது.
10 டிசம்பர்1868
லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தில் முதன் முதலில் போக்குவரத்து விளக்கு அமைக்கப்பட்டது.
10 டிசம்பர்1878
சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் பிறந்த நாள்.
மூதறிஞர் ராஜாஜி என்று அழைக்கப்பட்டவர் இவர். இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநராகப் (வைஸ்ராய்) பணியாற்றியவர். இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாண முதல்வர், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பொறுப்புகளை வகித்தவர்.
10 டிசம்பர்1896
புகழ்பெற்ற ஸ்வீட்டிஸ் வேதியியல் அறிஞரும் தொழிலதிபரும் நோபல் பரிசு நிறுவியவருமான ஆல்பர்ட் பென் ஹார்ட் நோபல் இத்தாலியில் காலமானார்
10 டிசம்பர்1901
நோபல் பரிசு முதன்முதலாக வழங்கப்பட்டது.
10 டிசம்பர்1921
பிரின்ஸ் ஆஃப் பெல்ஸ் வருகையை புறக்கணிக்கும்படி மக்களை தூண்டி விட்டதாக கல்கத்தாவில் சித்தரஞ்சன் தாஸ், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்
10 டிசம்பர்1921
இந்த ஆண்டு நோபல் பரிசு இயற்பியலுக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வழங்கப்பட்டது.
10 டிசம்பர்1930
இயற்பியலுக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு சர் சி வி ராமனுக்கு வழங்கப்பட்டது.


Comments
Post a Comment
Your feedback