நான் காதல் நோயால் தாக்கப்பட்டிருக்கிறேன்.
எல்லோரும் தூங்கும்போதும் என்னால் மட்டும் தூங்கமுடிவதில்லை.
பேரூர்த் தெருவில் பெருந் தூக்கத்தில் உள்ள சான்றோர்களே!
என் மேல் நீரைக் கொட்டி என்னை இந்தக் காதல் நெருப்பிலிருந்து காப்பாற்றுங்கள்.
அது எனக்குள் கனன்று எரிந்து கொண்டிருக்கிறது.
கார்மேகத்தைக் கொண்டுவந்து நீரைப் பொழியச் செய்தாலும் அது தணியாது.
இந்த நோய் என் உடம்பையெல்லாம் வெம்மையில் வறுத்தெடுக்கிறது.
அதனால் உண்டாகும் துன்பத்தை என்னால் தாங்கக்கூட முடியவில்லை.
எப்படியோ இந்த நோயில் மாட்டிக்கொண்டேன்.
இப்போது சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல என் கட்டுப்பாட்டில் நான் இல்லை.
நான் வெளிப் பார்வைக்குத் தான் பெண்ணாக இருக்கிறேன்.
ஆனால், உண்மையில் தங்கத்தால் செய்யப்பட்டு ரிமோட்டில் இயக்கப்படும் ஒரு பெண் பொம்மையாக எப்படியோ நடமாடிக் கொண்டிருக்கிறேன்.
பேர் ஊர் மறுகில் பெருந் துயிற் சான்றீரே!
நீரைச் செறுத்து, நிறைவுற ஓம்புமின்
கார் தலைக்கொண்டு பொழியினும், தீர்வது
போலாது, என் மெய்க் கனலும் நோய்
இருப்பினும் நெஞ்சம் கனலும்; செலினே,
வருத்துறும் யாக்கை; வருந்துதல் ஆற்றேன்;
அருப்பம் உடைத்து, என்னுள் எவ்வம் பொருத்தி,
பொறி செய் புனை பாவை போல, வறிது உயங்கிச்
செல்வேன், விழுமம் உழந்து .
(கலித்தொகை)
Comments
Post a Comment
Your feedback