19 டிசம்பர்
1961
கோவா விடுதலை நாள். போர்ச்சுகீசியர்களிடமிருந்து கோவா விடுவிக்கப்பட்டு இந்தியாவோடு
சேர்ந்தது.
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 19 ஆம் தேதி
கோவா விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.
19 டிசம்பர் 1994
தமிழறிஞர் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ (கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை) காலமானார்.
திருக்குறள் மேல் மிகுந்த ஈடுபாடு இவருக்கு உண்டு.
திருக்குறள் ஒன்றே வாழ்வை வளமாக்கும் நூல் என்று நம்பியவர் இவர்.
தமிழின் சிறப்பு, தமிழ்செல்வம், திருக்குறள் கட்டுரைகள், திருக்குறள் புதைபொருள், திருக்குறளில் செயல்திறன், வள்ளுவரும் குறளும், வள்ளுவர் உள்ளம் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.
19 டிசம்பர் 1997
டைட்டானிக் திரைப்படம் அமெரிக்காவில் இன்று வெளியானது. பின்னர் அது உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு சாதனைப் படங்களுள் ஒன்றானது.

Comments
Post a Comment
Your feedback