Skip to main content

கண்ணன் முகம் கண்ட கண்கள்...

 

என்ன ஏது என்று தெரியாமல் அவன் நினைவாகவே எப்போதும் இருக்கிறேன்.


எப்போதும் தனிமை...

எனக்குப் பிடிக்கும் என எல்லோருக்கும் தெரிந்ததெல்லாம் கூட இப்போது எனக்குப் பிடிக்காமல் போய் விட்டது.

யாரைப் பார்த்தாலும் சலிப்பு. 

கூப்பிட்டது அம்மா தான் என்று தெரியும். ஆனாலும் முன்பு போல ஓடிப் போய் கேட்பதில்லை. 


பேச, பழக இருந்த யாரையும் பிடிக்காமல் போய்விட்டது.

ரசித்து ருசித்த உணவெல்லாம் இப்போது வேண்டாதவை ஆகிவிட்டன.

தூக்கம் எங்கோ தொலைந்து போய்விட்டது.

பூ வாசம் எல்லாம் பிடித்தது எனக்கு.

இப்போதோ...

பூவும் எனக்குப் பிடிப்பதில்லை ...

வாசமும் முன்பு போல என்னை வசீகரிக்கப்பதில்லை.

என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் என்னென்னவோ செய்து வைக்கிறேன்.

துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த என்னை எங்கோ தொலைத்து விட்டு நிற்கிறேன்.

எனக்கு வந்திருப்பது காதல் வியாதி. 

அது தெரியாமல் நாடி பார்த்த வைத்தியர்கள் எல்லாம் "தப்பிப்பது கஷ்டம்" என்று கையை விரித்து விட்டுப் போய்விட்டார்கள்.

இனி வேறு வழியில்லை. பாலத்துச் சோசியர் தான் சரி என்று சொன்னார்கள். 

வந்து பார்த்த சோசியர் "இது கிரகம் படுத்தும் பாடு. அது நடந்து தான் தீரும்" என்று சொல்லிக் கிளம்பிப் போய்விட்டார். 

என்னைக் களவாடிக்கொண்டு போன அவன் ஒரு நாள் கனவில் வந்து என்னைத் தொட்டுஎழுப்பி விட்டான். 

"ஏன் இப்படி " என  அவனிடம் கேட்க வேண்டும் என்று எத்தனிக்கும் போதே எங்கோ காணாமல் போய்விட்டான்.

ஆனாலும் என் மனதுக்குள் மகிழ்ச்சி பொங்கி வந்தது. 

உள்ளமெல்லாம் குளிர்ந்து போனது.

உடம்பெல்லாம் முன்பு போல துடிப்பானது.

பார்ப்பதெல்லாம் அழகாகத் தெரிந்தன. 

எங்கு எதைத் தொட்டாலும் அவன் என்னைத் தொட்டது போலவே இருந்தது. 

மனது அமைதியை ஆனந்தமாக அனுபவித்தது.

யார் தான் அவன் என்று போசித்துக் கொண்டே இருந்தேன்.

அந்த முகம் என் கண் முன் வந்தது. 

யார் அவன் என்று கண்டு கொண்டேன்.

கண்முன் நான் கண்டது கண்ணன் முகம்.


தன்னைப் பெண்ணாகவும் கண்ணனைத் தன் காதலனாகவும் கண்டு திளைத்த பாரதியின் அனுபவம் இது.


தூண்டிற் புழுவினைப்போல் ---

வெளியே சுடர்விளக்கினைப் போல் ,

நீண்ட பொழுதாக-- எனது நெஞ்சந்துடித்ததடீ!

கூண்டுக்கிளியினைப்போல் --தனிமை

கொண்டு மிகவும் நொந்தேன் ;

வேண்டும் பொருளையெல்லாம்--

மனது வெறுத்து விட்டதடீ!

 பாயின்மிசை நானும் --தனியே படுத்திருக்கையிலே, தாயினைக்கண்டாலும்,--சகியே! சலிப்பு வந்ததடீ!

வாயினில் வந்ததெல்லாம் ,--சகியே! வளர்த்துப் பேசிடுவீர்; நோயினைப்போலஞ்சினேன் ;--சகியே!

நுங்களுறவையெல்லாம் . உணவு செல்லவில்லை ;--சகியே!

உறக்கங் கொள்ளவில்லை.

மணம் விரும்பவில்லை;--சகியே! மலர் பிடிக்கவில்லை;

 குணமுறுதி யில்லை ;--எதிலும் குழப்பம் வந்ததடீ !

கணமும் உள்ளத்திலே --சுகமே காணக் கிடைத்ததில்லை.

பாலுங் கசந்ததடீ!--சகியே! படுக்கை நொந்ததடீ!

கோலக்கிளி மொழியும் --செவியில் குத்தலெடுத்ததடீ !

நாலு வயித்தியரும் --இனிமேல் நம்புதற்கில்லைஎன்றார்;

 பாலத்துச் சோசியனும் --கிரகம் படுத்துமென்றுவிட்டான்

கனவு கண்டதிலே-- ஒருநாள் கண்ணுக்குத் தோன்றாமல்,

 இனம் விளங்கவில்லை --எவனோ என்னகந் தொட்டுவிட்டான் .

 வினவக் கண் விழித்தேன் ;--

சகியே! மேனி மறைந்து விட்டான்;

 மனதில் மட்டிலுமே --புதிதோர் மகிழ்ச்சி கண்ட தடீ !

 உச்சி குளிர்ந்ததடீ;--சகியே! உடம்பு நேராச்சு ;

மச்சிலும் வீடுமெல்லாம் --முன்னைப்போல்

மனத்துக் கொத்ததடீ! இச்சை பிறந்ததடீ!--

எதிலும் இன்பம் விளைந்ததடீ! அச்சமொழிந்ததடீ!--சகியே! 

அழகு வந்ததடீ! 

எண்ணும் பொழுதிலெல்லாம் --அவன்கை இட்ட விடத்தினிலே தண்ணென்றிருந்ததடீ! 

--புதிதோர் சாந்தி பிறந்ததடீ!

எண்ணி எண்ணிப் பார்த்தேன்;--அவன்தான் யாரெனச் சிந்தை செய்தேன்; 

கண்ணன் திருவுருவம் --அஙகே  கண்ணின் முன் நின்றதடீ

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...