அவசரமாக வந்த அந்தச் சிறுவன் கேட்டான்.
லிட்மஸ் பேப்பரை சாப்பிட முடியுமா?
லிட்மஸ் பேப்பர் என்பது chemistry lab ல பயன்படுத்துவது. ஒரு திரவம் அமிலமாக இல்லையா என அதை வைத்துக் கண்டுபிடிப்பாங்க.
Blue litmus சிவப்பாக மாறினால் அது acid.
அதெல்லாம் எனக்குத் தெரியும்.
அப்புறம் எதற்கு இந்தக் கேள்வி?
அதைச் சாப்பிட முடியுமா, முடியாதா? அதைச் சொல்லுங்க.
சாப்பிட எவ்வளவோ இருக்க அதைப் போய் ஏன் சாப்பிட நினைக்கிற?
நான் சாப்பிட நினைக்கல. சாப்பிடலாமானு தான் கேட்டேன்.
என்ன தான் பிரச்சினை உனக்கு இப்போ?
நானும் என் பிரெண்ட்ஸ்ம் விளையாடிக்கொண்டிருந்தோம்.
ஒரு தலைப்பு சொன்னால் அது தொடர்பாக ஆளுக்கொரு வார்த்தை சொல்லவேண்டும். யாருக்கு தெரியவில்லையோ அவன் அவுட். வார்த்தைகள் ரொம்ப ஈசியா இருக்கக் கூடாது.
சரி அதில் என்ன நடந்தது?
food and drink தான் தலைப்பு.
நான் chef சொன்னேன்.
அடுத்து ஒருத்தன் loaves சொன்னான்.
இன்னொரு நண்பன் glutton சொன்னான்.
அப்ப தான் ஒருத்தன் litmus சொன்னான்.
Litmus லாம் food and drink ல வராதுடானு சொன்னதுக்கு எங்க ஊர்லல்லாம் சாப்பிடுவாங்கனு சொல்லிட்டு எந்திருச்சுப் போய்ட்டான். அதான்.
Comments
Post a Comment
Your feedback