உப்பு வேணுமா?
ஆமா. போய்ப் பார்த்து வாங்கிட்டு வாங்க!
வாங்கிகிட்டு வந்துட்டேன்.
அதுக்குள்ள வாங்கிட்டு வந்துட்டீங்களா!
ஆமா.
உப்பு விற்றுக் கொண்டு போகிற அந்தப் பெண் நடக்கும் போது அவள் இடையோ இங்குமங்கும் மெல்ல அசைந்தது.
பூமாலை அணிந்த அவள் கூந்தலோ பின்புறம் அவள் இடைக்கும் தாழ்வாக நீண்டிருந்தது.
வாள் போன்ற கண்களோ இங்குமங்குமாய் பக்கங்களில் சென்றன.
அப்பெண் தன் அழகிய வாயைத் திறந்து வீடுகளின் முன்பாக உப்பு வாங்கலையோ உப்பு எனக் கூவியபடியே இருந்தாள்.
அப்பெண்ணின் ஒளிவீசும் புன்னகைக்கு கடலால் சூழப்பட்ட இந்த உலகம் கூட ஒப்பாகாது.
நான் பார்த்து வாங்கிகிட்டு வரச்சொன்னது உப்பை!
இடைநுடங்க ஈர்ங்கோதை பின்தாழ வாட்கண்
புடைபெயரப் போழ்வாய் திறந்து-கடைகடையின்
உப்போஒ எனவுரைத்து மீள்வாள் ஒளிமுறுவற்கு
ஒப்பபோ நீர் வேலி உலகு.
Comments
Post a Comment
Your feedback