20 டிசம்பர் 1876
பங்கின் சந்திர சட்டோபாத்தியாயா வந்தே மாதரம் என்னும் தேசியப் பாடலை எழுதினார்.
20 டிசம்பர் 1996
அமெரிக்க வானியல் ஆராய்ச்சியாளரும், பல நூறு ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டவருமான கார்ல் சாகன் மறைந்த நாள்.
உயிர்களின் தோற்றம் பற்றிய எல்லோருக்கும் புரியும்படியான இவரது ஒரு விளக்கம் கார்ல் சாகன் காலெண்டர் என உலகப் புகழ் பெற்றது.
கார்ல் சாகன் (Carl Sagan) பேரண்டத்தின் வரலாற்றை ஓர் ஆண்டுக்குள் சுருக்கிக் காட்டுகிறார்.
ஜனவரி 1 ஆம் நாள் பிரபஞ்சம் (Big Bang) தோன்றியதாகவும்,
மே 1 ஆம் நாள் ஆகாய கங்கை (Milky Way) தோன்றியதாகவும்,
செப்டம்பர் 25 ஆம் நாள் முதல் உயிரினம் பூமியில் தோன்றியதாகவும்,
டிசம்பர் 31 ஆம் நாள் இரவு 10.30 மணிக்கு முதல் மனிதன் தோன்றியதாகவும்
கார்ல் சாகன் குறிப்பிடுகிறார்.
அதாவது உலகத்தின் வயது ஒரு வருடம் என்று கொண்டால் மனிதன் பிறந்து 90நிமிடம் மட்டுமே ஆகிறது.
இதைத் தான் கார்ல் சாகன் காலண்டர் என்று கூறுகிறார்கள்.

Comments
Post a Comment
Your feedback