ஒரு பெண்ணின் பல்லைப் பார்த்துவிட்டு
"ஆகா அது முல்லை மலர் போல"
என்றும்
"முல்லை மலரின் மொக்கு தான் அது"
என்றும்
"இல்லை இல்லை அது பல் அல்ல முத்து"
என்றும்
மயங்கிப் பிதற்றிக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்.
எந்தப் பல்லுக்காக ஏங்கிக் கொண்டிருந்தார்களோ அந்தப் பற்கள் யாரும் ரசிக்காமல் கிடக்கும்.
எங்கே?
இறந்த பின் தகனம் செய்யும் மைதானத்தில் அது போன்ற பற்களையும் எலும்புகளையும் நிறையப் பார்க்கலாம்.
அதெல்லாம் பார்த்த பின்பும் பல்லை முத்து என்றும் முல்லை என்றும் சொல்பவனின் மூடத்தனத்தை என்ன சொல்வது?
முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
கல்லாப் புன்மாக்கள் கவற்ற விடுவெனோ
எல்லாரும் காணப் புறங்காட்டு உதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகுவேன்.
(நாலடியார்)
Comments
Post a Comment
Your feedback