உன் ஊர் வயல் சார்ந்த வளமான ஊர்.
அந்த வயல்களில் தேங்கியுள்ள நீரில் நெய்தல் மலர்ந்து மணம் வீசும்.
அந்த மணத்தால் கவரப்பட்ட வண்டுகள் அந்தப் பூக்களை நாடி வரும்.
வயலில் களை பறிக்க வரும் பெண்கள் களைகளைக் கையாடி, பிடுங்கிய பூடுகளை வரப்பில் வீசி எறிந்து விடுவார்கள்.
வண்டுகளுக்கு அந்தப் பூ உன்னதம் தான்.
ஆனால் களை பறிக்க வந்த அந்தப் பெண்களுக்கு அந்த நெய்தல் மலர்கள் வேண்டாத களைகள் தானே.
வெடுக்கென பிடுங்கி அந்த நெய்தல் மலர்களையும் வரப்பில் போட்டுவிடுவார்கள்.
ஆனாலும் அந்தப் பூக்கள் வரப்பிலும் மணம் வீசிக்கொண்டு கீழே கிடக்கும்.
"களை எனப் பிடுங்கிப் போட்டுவிட்டார்களே, இந்தக் கொடியவர்களை விட்டு வேறு நிலத்துக்குப் போய் வளர்வோம்" என்று நெய்தல் எப்போதும் நினைப்பதில்லை.
நானும் நெய்தலும் ஒரு ஜாதி.
நெய்தலுக்கு வயல்
எனக்கு உன் இதயம்.
கைவினை மாக்கள் தம் செய்வினை முடிமார்,
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட,
நீடிய வரம்பின் வாடிய விடினும்,
''கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்'' என்னாது''
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்
நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும!
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்,
நின் இன்று அமைதல் வல்லாமாறே.
(குறுந்தொகை)
Comments
Post a Comment
Your feedback