பூக்கள் அழகு தான்.
பூக்களுக்கு அழகு வண்டுகளை வரவழைக்கும் அதன் மணமும் அது தரும் தேனும் தான்.
குதிரையின் பிடரி மயிர் போன்ற
அழகிய தோற்றம் கொண்டது கரும்புப் பூ.
ஆனால், அதற்கு மணமும் இல்லை, தருவதற்கு தேனும் இல்லை.
பணமும் காசும் கொட்டிக் கிடந்தும் யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் தன்னுடைய செல்வச் செழிப்பிலும், வெற்று ஆடம்பரத்திலும் பெருமைப்பட்டுக் கொண்டு வாழ்பவர்கள் அந்தக் கரும்புப் பூப் போன்றவர்கள்.
தோற்றம் மட்டும் தான் கம்பீரம். எதற்கும் யாருக்கும் பயன்படாமல் போவது தான் அவர்கள் வாழ்க்கை.
கரும்புப் பூ கரும்புக்கே வேண்டாத சுமை தான். அந்தப் பூவால் என்ன பயன் அதற்கு?
கொடுக்கும் மனம் இல்லாத ஒவ்வொருவரும் இந்தப் பூமிக்கும் அப்படித்தான்.
தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி
தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு - ஓங்கும்
உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும்
பேராண்மை இல்லாக் கடை.
(நாலடியார்)
Comments
Post a Comment
Your feedback