யோசித்துப் பார்த்தால்...
வெற்றியும் தோல்வியும் அவரவர் மதிப்பீடு சார்ந்தவை.
வாழ்க்கையில் எதை நோக்குகிறோமோ அது கிடைத்தால் வெற்றி. அது தவறினால் அல்லது தாமதமானால் அதை தோல்வி என்று சொல்கிறோம்.
எந்தத் தோல்வியும் பெரிதல்ல. அதைப் பூதாகரமாக்கிவிடுவது நம் எண்ணங்கள் தான்.
அந்தந்தப் பருவத்தில் பெரிதாகத் தெரியும் தோல்விகள் காலமும் தூரமும் கடந்து நோக்குகையில் அற்ப விஷயமாகத் தெரியும்.
மதிப்பெண்கள் குறைவது போன்றவை அந்தந்தக் காலத்தில் வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைப்பவை.
ஆனால் அதைக் கடந்தும் வாழ்க்கை ஓடும். அதைவிட சிறப்பான நிகழ்வுகளும் வாய்ப்புகளும் வாய்க்கும்.
நாளை பற்றிய நம்பிக்கை தான் நேற்றைய காயங்களுக்கு மருந்து.
(Dr.R. Karthikeyan)
Comments
Post a Comment
Your feedback