கோசல நாட்டின் வளத்தை நமக்குக் காட்டும் கம்பன் பாடல் ...
வரப்புகள் எங்கும் முத்துக்கள் சிதறிக் கிடக்கின்றன.
மடைகள் எங்கும் வெண்சங்குகள்...
நீர் பாய்ந்த குரம்பு நிலங்கள் எல்லாம் செம்பொன் போலத் திகழ்கின்றன.
நிலம் குளிர்ச்சியாக இருந்ததால் எருமைகள் படுத்திருந்து எழுந்து போயிருக்கின்றன.
அந்தக் குழிகளில் இப்போது கழுநீர்ப் பூக்கள்...
நீர்க்கரை பவளம் போலத் தோன்றுகிறது.
நெல்வயல்களில் அன்னப் பறவைகள்...
கரும்புத் தோட்டங்களில் அங்கங்கே தேன்கூடுகள்...
சந்தனக்காடுகள் எங்கும் வண்டுகள்...
ஒரு பாடல் காட்சிக்கு location எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இப்போதும் இது தான் checklist.
வரம்பு எலாம் முத்தம்; தத்தும் மடை எலாம் பணிலம்; மா நீர்க்
குரம்பு எலாம் செம்பொன்; மேதிக் குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப் பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரும்பு எலாம் செந் தேன்; சந்தக் கா எலாம் களி வண்டு ஈட்டம்.
(கம்ப இராமாயணம்)
Comments
Post a Comment
Your feedback