எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக வயதாகிக் கொண்டே போகும்.
முதுமை வருவதற்கு முன்பே முடிந்தவரை யாருக்காவது ஏதாவது நல்லது செய்ய வேண்டும்.
அப்படி எந்த நல்லதும் யாருக்கும் செய்யாத நிலையில் வயதாகிப் போய்விடக் கூடாது.
வயதான பின்பு நாம் நல்லது செய்யலாம் என நினைத்தால் அது நடக்காது.
ஏனென்றால் நமக்கே அப்போது உதவிக்கு ஆள் வேண்டும்.
ஒரு நல்லதும் செய்யாமல் விட்டுவிட்டு இப்போது வயோதிகம் காரணமாக உதவிக்கு ஒரு வேலைக்காரப் பெண் வீட்டில் இருந்தால் அந்தப் பெண்ணிடம் திட்டுவாங்கியே அவரது நாட்கள் நகருமாம்.
"போ, வெளியே போய் உட்கார்",
"இங்கே என்ன வேலை அங்கே போய் வெளித் திண்ணையில் உட்கார்"
இப்படியெல்லாம் அந்தப் பெண்ணிடம் திட்டு வாங்கியே முதுமையைக் கழிக்க வேண்டியவர்கள் இப்போது யாருக்கும் எந்த உதவியும் செய்ய வேண்டியதில்லை.
இப்படிச் சொல்கிறது இந்தச் செய்யுள்.
மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
ஊக்கி அதன்கண் முயலாதான் - தூக்கிப்
புறத்திரு போகென்னும் இன்னாச் சொல் இல்லுள்
தொழுத்தையால் கூறப் படும்.
(நாலடியார் )
Comments
Post a Comment
Your feedback