யாரிடம் எதைச் சொல்வது என்பதில் தெளிவு இருந்துவிட்டால் அது ஒரு பிரச்சினையை எளிதாகத் தீர்க்கும் வழியாகிவிடும்.
அதே நேரத்தில் எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்.
எதையாவது சொல்லவேண்டும் என்பது தான் அவர்கள் எண்ணமே தவிர பிரச்சினைக்கு தீர்வை விரும்பி அவர்கள் சொல்வதில்லை.
வீட்டுக்கு வருவோர் போவோரிடம் "எனக்கு இங்கே வலிக்கிறது அங்கே வலிக்கிறது, நடந்தால் மூச்சு வாங்குகிறது" என்று விலாவாரியாக விளக்கம் சொல்கிறோம்.
ஆனால், அந்த நோயைத் தீர்க்கும் வழிவகை தெரிந்த மருத்துவரிடம் போகும்போது சொல்லமறந்து விட்டுவிடும் விஷயங்கள் உண்டு.
இவரிடம் சொன்னால் தீர்வு வரும் என்றுதெரிந்தால் அவரிடம் முழுமையாகச் சொல்லவேண்டும்.
இவரிடம் சொல்லி என்ன பிரயோசனம் என்று நினைத்தால் அவரிடம் எதையும் சொல்லக்கூடாது.
எதை எங்கு சொல்வது என்பது ஒரு வாழ்வியல் கலை.
தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்பர்எனப் பட்டார்க்கு
உற்ற குறையை உரைப்பதாம் - தெற்ற
அறையார் அணிவளையாய்! தீர்தல் உறுவார்
மறையார் மருத்துவர்க்கு நோய்.
(பழமொழி)
Comments
Post a Comment
Your feedback