கொடுத்த கடனைத் திருப்ப வாங்குவதற்காக ஒருவரைப் பாராட்டிக் கெஞ்சும்போது காணப்படும் நம் முகபாவமும் ,
நாம் வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பிக் கொடுக்கும் போது இருக்கும் நம் முகபாவமும்...
எப்போதும் ஒன்றாக இருக்காது.
அது இன்று நேற்று வந்ததல்ல.
காலங்காலமாக கொடுத்த கடனைக்
கேட்டுக் கெஞ்சுவதற்கு ஒரு முகமும் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க ஒரு முகமும் என்று மனிதர்கள் இயற்கையிலேயே அப்படித் தான்.
எப்பவும் ஒரே முகம் என்றால் கடன் எல்லாம் அவருக்கு ஒத்து வராது என்று அர்த்தம்.
உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம்
கொண்டது கொடுக்குங்கால் முகனும், வேறாகுதல்
பண்டும் இவ் உலகத்து இயற்கை; அஃது இன்றும்
புதுவது அன்றே புலனுடை மாந்திர்!
(கலித்தொகை)
Comments
Post a Comment
Your feedback