பொழில் என்னும் அழகிய சொல் மரங்களும், செடி கொடிகளும் செழித்தோங்கி வளரும் சோலையைக் குறிக்கும்.
ஆல மரங்கள் செறிந்து, அழகிய சோலையாக விளங்கிய ஓர் இடத்தைத் திருவாலம் பொழில் என்று தேவாரம் பாடுகிறது.
ஆலம்பொழிலில் அமர்ந்த பெருமானைத் திருஞானசம்பந்தர் பாமாலையால் போற்றியுள்ளார்.
மலைவளம் வாய்ந்த திருக்குற்றால மலையின் அடிவாரத்தில் கண்ணைக் கவரும் தண்ணறுஞ் சோலைகளின் நடுவே, ஓர் அழகிய ஊர் அமைந்திருக்கிறது.
அவ்வூரின் இயற்கை நலத்தினைக் கண்டு இன்புற்ற பண்டைத் தமிழர் அதற்குப் பைம்பொழில் என்று பெயரிட்டார்கள்.
பைம்பொழில் என்ற அந்த அழகிய பெயரை இப்போது அந்தப் பகுதி மக்கள் 'பம்புளி' எனக் குறிப்பிடுகிறார்கள்.
பம்புளின்னா என்னங்கனு கேட்டால் அது தான் ஊர்ப் பேரு. காலங்காலமாக அப்படித்தான் இருக்கு என்று சொல்லுகிறார்கள்.
அந்த வளமான சோலை எப்படி காணாமல் போனதோ அப்படியே அந்தப் பெயரும்...
சொல்ல வசதியாக இருக்கிறது என்பதற்காக நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாமல் விடுவதும் அவற்றை மறந்து விடுவதும் சரிதானா?
நல்ல தமிழும் நம் நாவில் தவழட்டும்.
Comments
Post a Comment
Your feedback