கருவுற்றிருக்கும் காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் தோன்றும் மாற்றத்தைக் குறித்த சிந்தனைகளும்
குழந்தையைச் சுமக்கும் போது இருக்கும் சிரமமும்
பிரசவத்தின் போது உண்டாகும் வலியும்
தன் குழந்தையைத் தன் மடியில் காணும்போது ஒரு பெண்ணுக்கு மறந்துவிடுகிறது; மகிழ்ச்சி வந்துவிடுகிறது.
உடல்நலம் சரியில்லாத போது
தன் சுற்றத்தார் வந்து பார்த்து
ஆறுதல் கூறும்போதும் அப்படித்தான். குழந்தை முகத்தைப் பார்த்த தாய் போல நமக்கு மகிழ்ச்சி வந்துவிடுகிறது.
வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும்.
(நாலடியார்)
Comments
Post a Comment
Your feedback