நன்றாகப் படிக்கவேண்டும்.
கற்றதை நன்கு பயன்படுத்தும் அளவு புரிந்து கொள்ளவேண்டும்.
அதில் நிபுணத்துவம் வந்தபின் அடக்கம் வர வேண்டும்.
கற்றுக்கொண்ட கல்வி மூலம் தீயனவற்றை நீக்கி, நல்லன செய்ய வேண்டும்.
எது நம்மிடம் இருக்கிறதோ அதில் மன நிறைவு எய்தவேண்டும்.
எதை இழந்து விடக்கூடாது என்று நாம் கற்ற கல்வி சொல்கிறதோ அதை திருத்தமாகப் பற்றிக் கொள்ள வேண்டும்.
நாம் செய்யும் பணியில் யாருக்கும் கெடுதல் நினைக்காமல், தப்பு வழியில் பொருள் தேடாமல் அறவழியில் நிற்க வேண்டும்.
கடவுள் நம்பிக்கையுடன் இறைவனை உணர வேண்டும்.
இப்படி வாழ முடியும் என்றால் நாம் நன்னெறியில் செல்பவர் என்ற நிலையை எட்டிவிடுகிறோம்.
கற்றாங் கறிந்தடங்கித் தீதொரீஇ நன்றாற்றிப்
பெற்றது கொண்டு மனந்திருந்திப் - பற்றுவதே
பற்றுவதே பற்றிப் பணியறநின் றொன்றுணர்ந்து
நிற்பாரே நீணெறிச்சென் றார்.
நீதிநெறி விளக்கம் (குமரகுருபரர்)
Comments
Post a Comment
Your feedback