வில் பாவம் என்னைப் பார்த்தவுடன் வளைந்துவிட்டது என்றும்,
யானை உறங்கிவிட்டது என்றும்,
புலி என்னைக் கண்டு பதுங்கிவிட்டது என்றும்,
என்னைப் பார்த்த ஆட்டுக் கடா முட்டாமல் பின்வாங்குகிறது என்றும்
ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால் யாரும் சொல்லாமலேயே அவன் முட்டாள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஏனென்றால், அடுத்து நடக்கப் போவதைப் புரிந்துகொள்ளும் அறிவு அவனுக்கு இருப்பதில்லை.
ஒரு மூர்க்கன் தான் பேசும் முட்டாள்தனமான பேச்சைக் கேட்டு பண்புள்ளவர்கள் பொறுமையாக இருப்பதை, தனக்கு எல்லோரும் பயந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொள்கிறான்.
காரணம் அவனுக்கும் அடுத்து நடக்கப் போவதைப் புரிந்து கொள்ளும் அறிவு இருப்பதில்லை.
வில்லது வளைந்த தென்றும் வேழம துறங்கிற் றென்றும்
வல்லியம் பதுங்கிற் றென்றும் வளர்கடா பிந்திற் றென்றும்
புல்லர்தம் சொல்லுக் கஞ்சி பொறுத்தனர் பெரியோ ரென்றும்
நல்லதென் றிருக்க வேண்டாம் நஞ்செனக் கருத லாமே.
(விவேக சிந்தாமணி)
Comments
Post a Comment
Your feedback