அன்றாட வாழ்க்கையை கொஞ்சம் சிரமப்பட்டு சமாளித்துக்கொண்டிருக்கும் எளிய குடும்பத்துக்கு பெரியவர்கள் விருந்தினராகச் செல்லக்கூடாது.
வந்தவரை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்று தன் தகுதிக்கு மீறி செலவு செய்து சிரமப்படுவர்.
அது ஆசையாக நாம் வளர்க்கும் குருவியை நாமே அறுத்துத் துன்புறுத்துவது போன்றது.
அதனால் தான் பெரியவர்கள் " நான் எங்கேயும் போவதில்லை. போனால் ஒத்துக்கொள்வதில்லை" என நளினமாக அவர்களின் அழைப்பை மறுத்துவிடுவார்கள்.
நல்கூர்ந் தவர்க்கு நனிபெரிய ராயினார்
செல்விருந் தாகிச் செலவேண்டா - ஒல்வ
திறந்தவர் செய்யும் வருத்தம் குருவி
குறங்கறுப்பச் சோருங் குடர்.
(பழமொழி)
Comments
Post a Comment
Your feedback