குழந்தை ஏதோ சொல்ல முயற்சிக்கிறது. அந்தக் குழந்தையின் மழலைச்சொல் யாழிசை போல இனிமையாகவா இருக்கிறது? இல்லையே.
எந்தக் காலத்தில் எந்த இராகம் என்று அந்தக் குழந்தை பார்ப்பதில்லை. எப்போதும் ஒரே இராகம் தான் அந்த மழலையில்.
அந்தக் குழந்தை என்ன சொல்கிறது என்ன பாடுகிறது என்று கூட எதுவும் புரிபடுவதும்
இல்லை.
என்றாலும் அந்தக் குழந்தை தன் மழலை மொழியில் தன் தந்தையின் மனதைக் கொள்ளை கொண்டுவிடுகிறது.
என் பாடல்கள் அந்த மழலை மொழி போல.
அதியமான் என் தந்தை போல.
ஏதோ எனக்குத் தெரிந்ததை நான் சொல்ல அது அவனுக்குப் பிடித்து விடுகிறது. அவ்வளவு தான்.
இப்படிச் சொல்பவர் ஔவையார்.
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள் அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை;
என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
கடி மதில் அரண் பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீ அருளல்மாறே.
(புறநானூறு)
Comments
Post a Comment
Your feedback