ஒரு நாள் சாப்பிடாமல் இருந்துவிடலாம் என்றால் ஒத்துக்கொள்ளமாட்டேன் என்கிறாய்.
போகும் இடத்தில் எங்கும் சாப்பிட முடியாது. அதனால் இரண்டு நாளைக்கு சேர்த்துச் சாப்பிட்டு விடலாம் என்றால் அதுவும் உன்னால் முடிவதில்லை.
போகிற இடத்துக்கெல்லாம் உன்னைக் கூட்டிக்கொண்டு போகவேண்டியிருக்கிறது.
என் வயிறே!
உன்னோடு வாழ்வது எனக்குக் கொடுமையாக இருக்கிறது.
ஒருநாளும் நீதரியாய் உண்ணென்று சொல்லி
இருநாளைக் கீந்தாலும் ஏலாய் – திருவாளா!
உன்னோடு உறுதி பெரிதெனினும் இவ்வுடம்பே!
நின்னோடு வாழ்த லரிது.
(முனைப்பாடியார் - அறநெறிச்சாரம்)
Comments
Post a Comment
Your feedback