எவ்வளவோ தூரத்தில் இருக்கிறது மேகக் கூட்டம். ஆனாலும் அதைக் கண்டு மயில் ஆடுகிறது.
எவ்வளவோ தூரத்தில் இருக்கிறது சூரியன். ஆனாலும் அதைக் கண்டு தாமரை மலர்கிறது.
எவ்வளவோ தூரத்தில் இருக்கிறது நிலவு. ஆனாலும் அதைக் கண்டு சிவந்த ஆம்பல் மயங்குகிறது; மலர்கிறது.
நம் அன்புக்குரியவர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தால் என்ன?
உண்மை அன்பு என்றால் மனதுக்குள் நெருக்கமாக இருப்போம்.
மங்கு லம்பதி னாயிரம் யோசனை மயில்கண்டு நட மாடும்
தங்கு மாதவன் நூறாயிரம் யோசனை தாமரை முகம் விள்ளும்
திங்க ளாதவற் கிரட்டியோ சனைபுறச் சிறந்திடு மரக்காம்பல்
எங்க ணாயினு மன்பரா யிருப்பவ ரிதயம்விட் டகலாரே.
(விவேக சிந்தாமணி)
.
Comments
Post a Comment
Your feedback