ஜூன் 1 1884 உலகப் புகழ் பெற்ற தாவரவியல் அறிஞரும் மரபியல் துறையை உருவாக்கி வருமான க்ரிகோரி ஜான் மெண்டல் இன்று காலமானார். ஜூன் 1,1935 கார் ஓட்ட கற்றுக் கொள்ளும் போது எல் போர்டு மாட்டுவது பிரிட்டனில் இன்று கட்டாயமாக்கப்பட்டது. ஜூன் 1,1968 மார்ஷல் நேசமணி மறைந்த நாள் ஜூன் 1,1968 இதே நாளில் தான் ஹெலன் கெல்லர் இவ்வுலகை விட்டு மறைந்தார். 1880 ஜூன் 27 அன்று பிறந்த அவர் 18-ம் மாதத்தில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பிறகு பேசும், பார்க்கும் மற்றும் கேட்கும் திறன்களை இழந்தார். இருந்தாலும் மனம் தளராமல் பொருள்களைத் தடவி, முகர்ந்து பார்த்து அடையாளம் காணமுயன்றார் ஹெலன். ஹெலனுக்கு ஏழு வயதாக இருக்கும்போது அவரின் பெற்றோர் அலெக்ஸாண்டர் கிரஹம்பெல்லைச் சந்தித்தனர். கிரஹம்பெல்லின் ஆலோசனைப்படி ஹெலனின் பெற்றோர், பாஸ்டனில் இயங்கிவரும் பெர்க்கின்ஸ் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதினர். பெர்க்கின்ஸ் நிறுவனம் ஹெலனின் வாழ்க்கையை மலரச் செய்யும் வகையில் ஒரு பெண்ணை அனுப்பி வைத்தது. அவர்த...