Skip to main content

Posts

Showing posts from April, 2025

ஏப்ரல் 30

  ஏப்ரல் 30, 1772  டயலுடன் கூடிய எடை மெஷின் தயாரிக்க லண்டனை சேர்ந்த ஜான்சி லேஸ் என்பவர் காப்புரிமம் பெற்றார்.     ஏப்ரல் 30, 1870 இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று குறிப்பிடப்படும் தாதாசாகெப் பால்கே பிறந்த நாள்.  திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதாசாகெப் பால்கே விருது இவருடைய பெயரின் தான் வழங்கப்படுகிறது.    ஏப்ரல் 30, 1945 உலகம் முழுவதையும் தன்னுடைய ஆளுமையால் அதிகாரத்தால் கட்டுப்படுத்த நினைத்த  ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் மறைந்த நாள்.    ஏப்ரல் 30, 2001 நாதஸ்வர வித்வான் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் மறைந்த நாள். 

ஏப்ரல் 27

  ஏப்ரல் 27, 1526  டெல்லியில் முகலாய பேரரசராக பாபர் முடி சூட்டிக்கொண்டார்.   ஏப்ரல் 27, 1882   கவிஞரும் கட்டுரையாளருமான Ralf Waldo Emerson   காலமானார். ஏப்ரல் 27, 1944 கு. ப. ரா என்று இலக்கிய உலகில் அழைக்கப்பட்ட கவிஞரான கு. ப. ராஜகோபாலன்  மறைந்த தினம்.  கவிதை மட்டுமன்றி சிறுகதை, நாவல் நாடகம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை வழங்கியவர். 'சிறுகதை ஆசான்' என்ற அடைமொழியால் அறியப்படுபவர் இவர். ஏப்ரல் 27, 1945 எழுத்தாளர் பிரபஞ்சன் பிறந்த நாள். இவர் எழுதிய வானம் வசப்படும் என்ற நாவலுக்காக 1995 ஆம் ஆண்டு, தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 26

ஏப்ரல் 26 , 1731 ராபின்சன் குரூஸோ என்னும் குழந்தைகள் இலக்கியத்தை உருவாக்கிய ஆங்கில நாவலாசிரியர் டேனியல் டிபோ   காலமானார். ஏப்ரல் 26 , 1762   சங்கீத மும்மூர்த்திகளில்  ஒருவரான  சியாமா சாஸ்திரிகள் பிறந்த தினம்.    ஏப்ரல் 26 , 1897   மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை மறைந்த தினம்.  இவர் எழுதிய புகழ் பெற்ற நாடகமான மனோன்மணீயம் இவருடைய பெயரோடு சேர்ந்து கொண்டது.  நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!" - மனோன்மணியம் சுந்தரனார் என இவர் எழுதிய பாடலின் ஒருபகுத...

ஏப்ரல் 25

  ஏப்ரல் 25, 1792 கில்லட்டின் என்னும் தலை வெட்டும் இயந்திரம் மூலமாக முதல் மரண தண்டனை இன்று பிரான்சில் நிறைவேற்றப்பட்டது. முதலில் இந்த இயந்திரத்தின் பெயர் லூயிசன் என்றுதான் இருந்தது. டாக்டர் லூயிஸ் என்பவர் இதை வடிவமைத்ததால் இந்தப் பெயரால் குறிப்பிடப்பட்டது.  வலி தெரியாமல் துரிதமாக மரணம் ஏற்படுத்தும் எந்திரத்தைப் பயன்படுத்துவது பற்றி டாக்டர் கில்லெட்டின் வற்புறுத்தி வந்தார். பின்னர் அவர் பெயரிலேயே இது பிரபலமடைந்தது. பிரெஞ்ச் புயல் புரட்சியின் போது தான் கில்லட்டின் கண்டுபிடிக்கப்பட்டது என்ற கருத்து பொதுவாக நிலவிய போதும்  இது அதற்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டது. ஜெர்மனியில் 13-ம் நூற்றாண்டு முதல் இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அப்போது இதன் பெயர் டைல்.  இத்தாலியில் இதன் பெயர் மானையா  ஸ்காட்லாந்தில் 1581 ஆம் ஆண்டு ரீசன்ட் மார்ட்டனின் தலை இதன் மூலமாகவே கொய்யப்பட்டது. ஏப்ரல் 25, 1897  தமிழகத்தின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நீராரும் கடலுடுத்த நிலமடந்தை என்னும் பாடலின் ஆசிரியர் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை இன்று காலமானார். ஏப்...

ஏப்ரல் 24

 24 ஏப்ரல் 1934 தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தவரான ஜெயகாந்தன்  பிறந்த நாள்.  இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய பல படைப்புகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.  சில நேரங்களில் சில மனிதர்கள் ,ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் போன்ற இவரது படைப்புகள் புகழ் பெற்றவை. 24 ஏப்ரல் 1936  தமிழறிஞர் ஔவை து. நடராசன் பிறந்த நாள்.  ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளிலும் நிபுணத்துவம் பெற்றவர் இவர்.  ஆங்கிலத்திலும், தமிழிலும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.  இவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கூட.   24 ஏப்ரல் 1937 இசைத்துறையில் சூலமங்கலம் சகோதரிகள் என்று அழைக்கப்படும் சகோதரிகள் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரில் ஒருவரான  ஜெயலட்சுமி பிறந்த தினம்.   சூலமங்கலம் சகோதரிகள்  பாடிய கந்த சஷ்டி கவசம் உலகம் முழுதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.    ஏப்ரல் 24, 1945  பர்மாவின் வீழ்ச்சி உறுதியானதும் ஜப்பானியரைத் தொடர்ந்து நேதாஜியும்...

ஏப்ரல் 23

  ஏப்ரல் 23,1640 சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்ட நாள். பிரான்சிஸ் டே என்பவர் கிழக் கி ந்திய கம்பெனி வாணிபம் செய்வதற்காக 10 சதுர கிலோமீட்டர் பரப்புடைய நிலத்தை கடற்கரையை ஒட்டி வாங்கினார்.  அவரும் கிழக்கு இந்திய கம்பெனி உரிமையாளர் ஆண்ட்ரூ ஜோகன் என்பவரும் இந்த இடத்தில் ஒரு பண்டகசாலை கட்டி முடித்தனர்.  கட்டி முடித்த நாள் செயிண்ட் ஜார்ஜ் தினம். எனவே இந்த இடத்திற்கு செயிண்ட் ஜார்ஜ் கோட்டை என்று பெயர் சூட்டினார்கள். ஏப்ரல் 23, 1826   கிறித்துவக் கம்பர் என்ற அடைமொழியோடு குறிப்பிடப்படும் எச். ஏ. கிருஷ்ணபிள்ளை பிறந்த நாள்.  ஏப்ரல் 23, 1915 ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் புரூக் காலமானார். ஏப்ரல் 23, 1916 பாலகங்காதர திலகர் ஹோம் ரூல் இயக்கத்தை துவக்கினார். ஏப்ரல் 23, 1938 தென்இந்தியாவின் நைட்டிங்கேல், ஜானகியம்மா என்றெல்லாம் அழைக்கப்படும் பாடகி S.P. ஜானகி ஆந்திராவில் இன்று பிறந்தார்.   1957  ஆம் ஆண்டு முதல் பாடிக்கொண்டிருக்கும் இவர் இன்றும் தன்னுடைய  குரலின் இளமையைப் பராமரித்து வருவது நினைத்துப் பார்க்க முடியாத சாதனை.  சிங்கார ...

ஏப்ரல் 22

  ஏப்ரல் 22, 1833 முதல் நீராவி எஞ்சினை 1803 ஆம் ஆண்டு உருவாக்கிய ரிச்சர்ட் ட்ரிபிதிக்  காலமானார். சிறந்த பொறியியல் மேதையான இவரது திறமையை அன்று எவரும் புரிந்து கொள்ளாததால் இறக்கும் வரை வறுமையில் வாடியவர் இவர். ஏப்ரல் 22, 1958 இந்தியக் கடல்படையின் தலைமைத் தளபதியாக அட்மிரல் ஆர்.டி.கட்டாரி பதவி ஏற்றார். இப்பதவி ஏற்ற முதல் இந்தியர் இவர்தான். ஏப்ரல் 22, 2013 புகழ்பெற்ற வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் மறைந்த நாள். 

ஏப்ரல் 21

  ஏப்ரல் 21, 1526   முதலாம் பானிபட் போர் நடந்த நாள் டெல்லிக்கு அருகில் 80 கிலோமீட்டர் தூரத்தில் இப்ராஹிம் லோடி தலைமையில் நூற்றுக்கணக்கான யானைகள் மீது வில்வீரர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குதிரை வீரர்களும் பாபரின் 12 ஆயிரம் வீரர்களுக்கு எதிராக போர் துவங்கினர். பாபரின் போர் உத்தியினால் இப்ராஹீம் லோடியின் பெரும்படை சின்னாபின்னமாக்கப்பட்டது. போரில் மடிந்த டெல்லி வீரர்களின் எண்ணிக்கை 50,000 க்கு மேல் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். காலையில் ஆரம்பித்த போர் நடுப் பகலில் முடிந்துவிட்டது. பாபரின் இந்த வெற்றி இந்தியாவில் முகலாயப் பேரரசுக்கு அடிக்கல் நாட்டியது. ஏப்ரல் 21, 1925 வாண்டுமாமா என்ற பெயரில் சிறுவர் படைப்புகளை வழங்கிப் புகழ் பெற்றவரான வி. கிருஷ்ணமூர்த்தி பிறந்த நாள். கல்கி, பூந்தளிர், கோகுலம் போன்ற பல இதழ்களில் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர்.  வாண்டுமாமா என்ற பெயரில் சிறுவர் இலக்கியங்களையும்  கௌசிகன் என்ற பெயரில் பொதுவான படைப்புகளையும் வழங்கியவர் இவர்.  ஏப்ரல் 21, 1946  உலக வங்கி, இன்டர்நேஷனல் மானிட்டரி பண்ட்(IMF) முதலானவை தோன்ற அடித்...

ஏப்ரல் 20

  ஏப்ரல் 20, 1889 உலக வரலாற்றில் அதிகம் பேசப்பட்ட ஜெர்மானிய சர்வாதிகாரி அடல்ட் ஹிட்லர் இன்று தான் பிறந்தார். ஏப்ரல் 20, 1939   கவிஞர் பிரமிள் பிறந்த நாள்.  பிரமிள் உள்ளிட்ட பல புனைபெயர்களில் கவிதை  எழுதிய இவருடைய இயற்பெயர்  தருமு சிவராம். இலங்கையில் பிறந்த இவர் ஒரு ஓவியரும் கூட. புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமானவர்களுள் இவரும் ஒருவர்.   ஏப்ரல் 20, 1986  ஏர் இந்தியாவின் முதல் ஏர்  பஸ் யமுனா பம்பாய்க்கு வந்து சேர்ந்தது. ஏப்ரல் 20, 1987   ஜப்பானைச் சேர்ந்த சிஞ்சிகசமா என்பவர் வட துருவத்தை முதன் முதலில் மோட்டார் சைக்கிளில் சென்றடைந்தார்.

ஏப்ரல் 19

  ஏப்ரல் 19,1824 பைத்தியம் கொடியவன் ஆபத்தானவன் என்றெல்லாம் தன் காதலியாலேயே வருணிக்கப்பட்டவரும் தன் வாழ்நாளிலேயே உலகப் புகழ்பெற்ற முதல் ஆங்கில கவிஞருமான லார்ட் பைரன் கிரீஸ் நாட்டில் ஒரு வகைக் காய்ச்சலினால் காலமானார். ஏப்ரல் 19, 1882  பரிணாமக் கொள்கையை அறிவித்த சார்லஸ் டார்வின் இன்று காலமானார். ஏப்ரல் 19, 1906 மேரி கியூரியின் கணவர் பியாரி கியூரி மரணமடைந்தார். அறிவியல் கருத்தரங்கில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பும் போது பாரிஸ் தெருவில் பியாரி கியூரி மீது ஒரு குதிரை வண்டி மோதி கீழே தள்ளியது. அப்போது எதிர்ப்புறமாக வந்து கொண்டிருந்த பாரவண்டி அவர் மீது ஏறியதால் அவர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தார்.  1904 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் இவரும் ஒருவர். ஏப்ரல் 19, 1944 W.O.ஹியூம், தாதாபாய் நவரோஜியுடனிருந்து காங்கிரஸ் மகாசபையை ஆரம்பித்தவரும் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்த நாகபுரி காங்கிரசுக்கு தலைமை வகித்தவரும் விடுதலைப் போராட்ட வீரருமான சேலம் சி.விஜயராகவாச்சாரியார் இன்று காலமானார். ஏப்ரல் 19, 1951 உலக அழகி போட்டி முதன் முதலில் ஸ்ட்ராண்ட் என்னுமிடத்தில் நடைபெற்...

ஏப்ரல் 18

  ஏப்ரல் 18, 1859 சில துரோகிகளினால் காட்டிக் கொடுக்கப்பட்டு, ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட தாந்தியாதோப் இன்று தூக்கிலிடப்பட்டார் ஏப்ரல் 18, 1916 சுதேசமித்திரன் இதழைத் துவக்கியவரும் தமிழ் பத்திரிக்கைத் துறை முன்னோடியும் இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றுவதற்கு காரணமாக இருந்த முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஜி.சுப்பிரமணிய ஐயர் இயற்கை எய்தினார். நண்பர்களுடன் சேர்ந்து  இந்து (HINDU)  பத்திரிக்கையைத் துவக்கியவரும் இவரே. ஸ்வராஜ்ஜியமே விமோசனம் என்று வலியுறுத்தியதன் காரணமாக சிறை சென்றவர் இவர். ஏப்ரல் 18, 1955 சார்பியல் கொள்கையைத் தந்த உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி நோபல் பரிசு பெற்ற அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் காலமானார். ஏப்ரல் 18, 1994 குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அமெரிக்காவில் காலமானார். அப்போது அவருக்கு வயது 70.  23 வயதில் குமுதம் இதழைத் துவக்கி பத்தாண்டுகளில் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் வார இதழாக உயர்த்திக் காட்டியவர்.  குமுதத்தையே தனது முகமாக காட்டிக் கொண்டு தன் முகத்தை மறைத்துக் கொண்டவர் இவர்.

ஏப்ரல் 17

ஏப்ரல் 17, 1756 -  விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள்.    ஏப்ரல் 17, 1785   பன்மொழி அறிஞரும்  பெரும் புலவருமான சிவஞான முனிவர் காலமானார்.  இவர் கம்பர் அந்தாதி, சோமேஸ்வரர் முதுமொழி வெண்பா, திருத்தொண்டர் திருநாமக் கோவை போன்ற நூல்களை எழுதியவர். ஏப்ரல் 17, 1790 புகழ்பெற்ற அறிவியல் அறிஞரும் அரசியல்வாதியுமான பெஞ்சமின் பிராங்கிளின் இன்று காலமானார். ஏப்ரல் 17, 1912 மலையாள மொழி எழுத்தாளரான தகழி சிவசங்கரப் பிள்ளை பிறந்த நாள்.  இவரது படைப்பான செம்மீன் ஒரு புகழ் பெற்ற  நூல்.  ஏப்ரல் 17, 1917 தமிழில் பிறமொழிக் கலப்பு எப்படி அவசியம் இல்லையோ அப்படியே எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் மாற்றங்களைச் செய்யக்கூடாது என உறுதியாக இருந்த வ.சுப.மாணிக்கனார் புதுக்கோட்டை மேலைச் சிவபுரியில் இன்று பிறந்தார். ஏப்ரல் 17, 1975 இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும் ஜனாதிபதியாகவும் பணியாற்றிய தத்துவ மேதை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இன்று காலமானார். 17 ஏப்ரல் 1992 உரையாசிரியர் புலியூர்க் கேசிகன் மறைந்த நாள்.  ஏப்ரல் 17, 2013 திரையிசை உலகில் விஸ்வநாதன்-ராம...

ஏப்ரல் 16

  ஏப்ரல் 16, 1853 பம்பாய்க்கும் தானேவிற்கும் இடையே இன்று முதல் ரயில் ஓடியது. இதில் 400 பயணிகள் பிரயாணம் செய்தனர். அவர்கள் அனைவருமே விழாவிற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள். ஏப்ரல் 16, 1888 நீர்ம ஆக்சிஜனை உருவாக்கிப் புகழ்பெற்ற போலந்து  அறிவியலாளர் ச ர்  சிக்மண்ட் பிளாரன்டரி வான் ரோபில்வெஸ்கி இன்று தனது ஆய்வுக்கூடத்தில் இருக்கும்போது மண்ணெண்ணெய் விளக்கில் இடறி விழுந்து தீப்பிடித்து இறந்து போனார். ஏப்ரல் 16, 1889 மாபெரும் நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் லண்டனில் இன்று தான் பிறந்தார். ஏப்ரல் 16. 1958  டி என் ஏ (D.N.A) கட்டமைப்பு பற்றி விவரித்து புகழ்பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி ரோசலின்  எல்சி பிராங்க்ளின் என்னும் பெண் 38 வயதில்  காலமானார். 

ஏப்ரல் 15

ஏப்ரல் 15, 1865 நேற்று வாஷிங்டனில் போர்ட் நாடக அரங்கில் பூத் என்பவனால் சுடப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் இன்று காலமானார். ஏப்ரல் 15, 1974  சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நீண்ட காலம் பணியாற்றிய சர்.ஏ.லட்சுமண முதலியார் காலமானார்.   ஏப்ரல் 15, 1990   நகைச்சுவை நடிகர் கல்லாப்பெட்டி சிங்காரம் மறைந்த நாள்.  ஏப்ரல் 15, 1995  குன்றக்குடி ஆதீனத்தின் மடாதிபதியாக இருந்த குன்றக்குடி அடிகள் மறைந்த நாள். 

ஏப்ரல் 14

  ஏப்ரல் 14, 1865 ஆபிரகாம் லிங்கன் இன்று சுடப்பட்டார்.   வாஷிங்டனில் ஒரு நாடக அரங்கில் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஜான் பூத் என்பவனால் சுடப்பட்டார். ஏப்ரல் 14, 1890 இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பியான பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் இன்று தான் பிறந்தார். ஏப்ரல் 14, 1896 கன்னிமாரா நூலகத்தின் திறப்பு விழா நடந்தது.  அன்றைய சென்னை மாகாண கவர்னர் கன்னிமாரா பொதுமக்களுக்கு படிப்பார்வம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நூலகத்திற்கு 1890 ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.  இதனால் இந்த நூலகத்திற்கு அவர் பெயரே வைக்கப்பட்டது. ஏப்ரல் 14,  1907   நாடக நடிகராக  இருந்து பின் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகராகப் புகழ் பெற்றவரான எம். ஆர். ராதா பிறந்த நாள் ஏப்ரல் 14,  1912 டைட்டானிக்  இன்று  மூழ்க ஆரம்பித்தது   உலகிலேயே மிகப்பெரிய சொகுசுக் கப்பலான டைட்டானிக் இங்கிலாந்தில் சவுத் ஆம்டனிலிருந்து நியூயார்க்குக்கு இன்று  தன் முதல் பயணத்தை த்  துவக்கியது. நள்ளிரவுக்கு சற்று முன்னர் பனிப்பாறையில் மோதிய...

ஏப்ரல் 13

  ஏப்ரல் 13, 1919 ரத்த ஞாயிறு என்று குறிப்பிடப்படுகின்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நாள் இன்று. மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட  கச்சிலுவையும் சத்தியபாலையும் அமிர்தசரசிலிருந்து பிரிட்டிஷ் அரசு வெளியேற்றியது.  இந்தச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஞாயிற்றுக்கிழமையான இன்று அமிர்தசரத்தில் ஜாலியன் வாலாபாக்கில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தைக் கலைக்க ஜெனரல் டயர் தலைமையில் வந்த படையினர் கண்மூடித்தனமாகச் சுட்டதில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். 2000 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. கண்ணில்படுகின்ற மக்களை எல்லாம் கைது செய்து சிறையில் தள்ளினர். அந்தக் கொடுமையான ஞாயிறு இன்று.   ஏப்ரல் 13, 1930   கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள்.  எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை மனதில் நிற்கும் வகையில் பாடுவது  இவரது  சிறப்பாகும்.  குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்! குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்! தட்டுக்கெட்ட...

ஏப்ரல் 12

ஏப்ரல் 12,1606 இங்கிலாந்தின் தேசிய கொடியாக யூனியன் ஜாக் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏப்ரல் 12, 1633 சமயக் கருத்துக்கு முரண்பாடாக கோபர் நிகஸ் கொள்கையான 'சூரிய மையக் கொள்கை' அதாவது சூரியனைச் சுற்றியே எல்லா கோள்களும் சுற்றி வருகின்றன என்ற கொள்கையை நிரூபித்ததற்காக சமய நீதிமன்றம் இன்று கலிலியோவை விசாரணை செய்தது. அந்த மன்றத்தினால் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்றாலும் கலிலியோவிடம் பூமியைச் சுற்றியே சூரியன் உட்பட எல்லா கோள்களும் சுற்றி வருவதாக ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிக் கொண்டு இந்த வழக்கு இன்று முடித்து வைக்கப்பட்டது. அதன்படி தான் நிரூபித்த கொள்கையான சூரியனைச் சுற்றியே எல்லாக் கோள்களும் சுற்றி வருகின்றன என்பது தவறு.  சமய நூல் சொல்வது போல பூமியைச் சுற்றியே சூரியன் உட்பட எல்லாக் கோள்களும் சுற்றி வருகின்றன என்று எழுதிக்கொடுத்துவிட்டு வருத்தத்துடன் வீடு திரும்பினார்.  ஏப்ரல் 12, 1945 அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பிராங்கிளின்  ரூஸ்வெல்ட் மறைந்த நாள்.  இப்போது ஒருவர் இரண்டு முறை மட்டுமே அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்க முடியும். அதற்கு விதி விலக்கான ஒரே ஜனாதிபதி இவர் தான்....

ஏப்ரல் 11

ஏப்ரல் 11, 1906 வாகீச கலாநிதி என்று போற்றப்பட்ட  கி.வா.ஜகந்நாதன் பிறந்த நாள்.  இவர் தமிழறிஞர் உ. வே.சாமிநாதய்யரின் மாணவர்  கலைமகள் இதழின் ஆசிரியராகப்  பணியாற்றியவர்.  1967-இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன நூலுக்கு  சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. ஏப்ரல் 11, 1979 இடி அமீன் எதிர்ப்பாளர்கள் தான்சானியா படை உதவியுடன் ஆறு மாத காலம் போர் புரிந்து உகாண்டாவின் தலைநகரான காம்பாலாவை கைப்பற்றினர்.  இதனால்  இடி அமீன் கொடுங்கோல் ஆட்சி இன்றுடன் முடிந்தது. இடிஅமீன் லிபியாவுக்குத் தப்பியோடிவிட்டான். 

ஏப்ரல் 10

  ஏப்ரல் 10, 1894 நியூயார்க்கில் பில்லியன் ஹண்ட் என்பவர் சேப்டி பின்னைத் தயாரித்து அதற்கு காப்புரிமம் பெற்றார். ஏப்ரல் 10, 1931 லெபனானில்  பிறந்து உலகம் முழுதும் புகழ் பெற்ற கவிஞர்   கலீல் ஜிப்ரான் மறைந்த நாள்.  ஏப்ரல் 10, 1989 ஆண்டவன் சுவாமிகள் என்று பக்தியுடன் அழைக்கப்பட்டவரும் ஶ்ரீரங்கம் மொட்டை கோபுரத்தை பொதுமக்கள் மற்றும் அரசின்  நிதியுதவியோடு மாபெரும் கோபுரமாக கட்டி முடித்தவருமான ஶ்ரீநிவாச ராகவாச்சாரியார் காலமானார். ஏப்ரல் 10, 1995   முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் மறைந்த நாள். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே. ஏப்ரல் 10, 1999 மலையாள மொழியின் எழுத்தாளர்களில் முக்கியமானவரான தகழி சிவசங்கர பிள்ளை மறைந்த நாள்.  செம்மீன்  என்ற அவரது  நாவல் உலகப் புகழ் பெற்ற ஒரு நாவல். இதை திரைப்படமாகவும் தயாரித்தனர். அதற்கு சிவசங்கரப் பிள்ளையே திரைக்கதை எழுதினார். அந்தத் திரைப்படமும்  தேசிய விருது பெற்றது. இவரது பெரும்பா...

ஏப்ரல் 9

  ஏப்ரல் 9, 1915 இன்றைய Virology துறை உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவரான Friedrich August Johannes Loffler இன்று ஜெர்மனியில் காலமானார். ஏப்ரல் 9, 1922 யானைக்கால் வியாதி ஒருவகைக் கொசுவினால் தான் பரவுகிறது என்பதை நிரூபித்த பிரிட்டிஷ் விஞ்ஞானி சர் பட்ரிக் மான்சன் லண்டனில் இன்று காலமானார். ஏப்ரல் 9, 1965 ராங் ஆஃப் கட்ச் பகுதியில் இந்திய பாகிஸ்தான் படைகளுக்கிடையே இன்று போர் மூண்டது. ஏப்ரல் 9, 1992 பிரிட்டனின் நகைச்சுவை வார இதழான பஞ்ச் இன்னும் பத்திரிகையில் கடைசி இதழ் இன்று வெளியானது.  151 ஆண்டுகளாக தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்த இந்தப் பத்திரிகையின் கடைசி இதழ் 70000 பிரதிகளே அச்சடிக்கப்பட்டன.  மேற்குத் திசையில் சூரியன் அஸ்தமிக்கும் காட்சியை மிஸ்டர் பஞ்ச் அவரது நண்பரோடும்  நாய் டோபியுடனும் மிக வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது போல அட்டைப்படம் போடப்பட்டிருந்தது. ஏப்ரல் 9, 2024  முன்னாள் அமைச்சரும்  திரைப்படத்  தயாரிப்பாளருமான ஆர்.எம்.. வீரப்பன் மறைந்த நாள். எம்.ஜி.ஆர்   தான் தொடங்கிய ""எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் "  நிறுவன நிர்வாகத்தை...

ஏப்ரல் 8

  ஏப்ரல் 8, 1857  மாட்டுக் கொழுப்பு தடவிய குண்டுகளைப் பயன்படுத்த மறுத்ததற்காக இந்திய வீரர்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளால் அவமானப்படுத்தப்பட்டனர்.  இதைக் கண்டு பொறுக்காத மங்கள் பாண்டே என்னும் இந்திய வீரன், மூன்று பிரிட்டிஷ் அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக். கொன்றுவிட்டான்.  கர்னல் வீலர் தலைமையில் சென்ற பிரிட்டிஷ் படை மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு பாண்டேயைக் கைதுசெய்தது.  இருபத்தாறு வயதான மங்கள் பாண்டே இன்று பாரக்பூரில் ஒரு  மரக் கிளையில் தூக்கிலிடப்பட்டான்.  மங்கள் பாண்டே குறித்த மேலும் சில செய்திகள்: 1827ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார். 1857ல் சிப்பாய் கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தவர்.  இவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் 34வது ரெஜிமென்டில் படை வீரராக பணிபுரிந்த மங்கள் பாண்டே, தான் சிப்பாய் கலகத்தைத் தொடங்கி வைத்தவர். இதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களுக்குகிடையே ஏற்பட்ட கலகம் காரணமாக மங்கள் பாண்டே கைது செய்யப்பட்டு 34வது படைபிரிவு கலைக்கப்பட்டது. மங்கள் பாண்டேவின் வரலாற்றைச் சித்தரிக்க...

ஏப்ரல் 7

  ஏப்ரல் 7, 1827  உலகில் முதன் முதலாக இன்று தீப்பெட்டி விற்பனை   தொடங்கியது. ஏப்ரல் 7, 1920   இந்திய இசையின் பெருமையை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதில் முக்கியமான ஒருவரான உலகப் புகழ் பெற்ற  சித்தார் இசைக்கலைஞர்  பண்டிட் ரவி சங்கர்  பிறந்த நாள்.   ஏப்ரல் 7, 1947 போர்ட்  கார் நிறுவனத்தின் நிறுவனர் ஹென்றி போர்டு  மறைந்த நாள்.  இவர் அறிமுகப்படுத்திய வாகனங்கள் தான்  அமெரிக்கப் போக்குவரத்திலும், தொழில்துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்தன.   ஏப்ரல் 7, 1998 குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இசையமைப்பாளர்களுள் ஒருவரான  எஸ். வி. வெங்கட்ராமன் மறைந்த நாள்.   இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தார். இவர் நடிகராகவும், பாடகராகவும் சில  திரைப்படங்களில் தன்னை நிரூபித்தவர். 

ஏப்ரல் 6

   ஏப்ரல் 6, 1815 உ.வே.சாமிநாதையரின் ஆசிரியரான ‘மகாவித்வான்’  மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த நாள்.  ஏப்ரல் 6, 1909  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களைத்  தோற்றுவித்த வள்ளல்  அழகப்பச் செட்டியார் பிறந்த நாள். ஏப்ரல் 6, 1950  இதற்கு க்  கொடுக்கப்படும் விலையைக்  கொ ண் டு  உலக மக்கள் அனைவருக்கும் இரண்டு நாட்கள் வயிறார உணவு கொடுக்க முடியும் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்பட்ட உலகப் புகழ் பெற்ற கோஹினூர்  வைரம் இன்று இங்கிலாந்துக்கு  எடுத்துச் செல்லப்பட்டது.  ஏப்ரல் 6, 1909  ராபர்ட் எட்வின் பியரி இன்று வடதுருவத்தை முதன் முதலில் சென்றடைந்தார்.  ஏப்ரல் 6, 1919 ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தி இன்று பொது வேலைநிறுத்தத்தைத் தொடங்கினார். ஏப்ரல் 6, 1930  காந்தி தலைமையில் தண்டியில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது. அதே நேரத்தில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் 96 தியாகிகள் உப்பு சத்தியாகிரகம் செய்து சிறைக்குச் சென்றனர்.  ஏப்ரல் 6, 1938 இயற்கை வேளாண் அறிவியல் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் ...

ஏப்ரல் 5

  ஏப்ரல் 5, 1827 சிலரை யார் என்று நமக்கு தெரியாது. ஆனால் அவர்கள் செய்த செயல் நாம் மறக்க முடியாததாக இருக்கும். அப்படிப்பட்ட ஒருவர் தான் இன்று லண்டனில் பிறந்தார்.  ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பு விபத்து ஏற்பட்டாலோ நோய் வந்தாலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்த பிறகு நோய்த் தொற்று ஏற்பட்டு பெரும்பாலும் அவர்கள் மரணம் அடைய வேண்டிய நிலையை இருந்தது. இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வைக் கண்டவர் டாக்டர் ஜோசப் லிஸ்டர் பிரபு.  இவர் தான்   ஆன்ட்டி செப்டிக் கண்டுபிடித்தவர். ஒரு நாள் திராட்சை சாறு புளிப்பான மதுவாக  மாறுவதற்கு காரணம் காற்றிலே கலந்து வரும் கிருமிகள் தான் என்று லூயி பாஸ்டியர் எழுதியதைப் படித்தார். அப்படியானால் காற்றிலே கலந்து வருகின்ற கிருமிகள் தான் புண்ணின் வழியாக உள்ளே சென்று வீக்கத்தை உருவாக்கி நோயாளிகளை மரணம் அடையச் செய்யுமோ என்று யோசித்தார். அதன் விளைவாக இந்த ஆன்ட்டி செப்டிக் சர்ஜரி என்ற புதிய முறையை முதன்முதலாக 1867-ல் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்திப் பார்த்தார் லிஸ்ட்டர் பிரபு. கார்போலிக் அமிலக் கரைசலை அறுவை சிகிச்சையின் போது இவர் பய...