குருவிகள், கிளிகள் பயிர்களைச் சேதப்படுத்தாமல் விரட்டிக்கொண்டிருக்கிறாள் அவள். அவள் தோழியும் கூடவே அங்கிருக்கிறாள்.
அப்போது அந்தப் பக்கமாக வருகிறான் அவன்.
கேட்டுவிட வேண்டும் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டவனாக அவர்கள் அருகில் சென்று கேட்கிறான்.
"மான் இந்தப் பக்கம் வந்ததா?"
கேட்டுவிட்டுப் போய்விடுகிறான்.
அவன் போன பின்பு அவளிடம் அவள் தோழி "அவன் கேட்க வந்தது மான் பற்றி அல்ல. வேறு ஏதோ இருக்கிறது" என்று சொல்லிச் சிரிக்கிறாள் தோழி.
புனை பூந்தழை அல்குல் பொன் அன்னாய் ! சாரற்
தினை காத்திருந்தேம் யாமாக - வினை வாய்த்து
மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டுத்
தாம் வினவலுற்றது ஒன்று உண்டு.
(ஐந்திணை ஐம்பது )
சொல்லும் பொருளும்
புனைபூ - கட்டிய பூ
தழை - இலை
அல்குல் - இடுப்பு
பொன் அன்னாய்- பொன் போன்றவளே
சாரல் - மலைச் சாரலில்
தினை - தினைப் புனங்களை
காத்திருந்தேம்- காத்து இருந்தோம்
யாமாக - அவனாக
வினை வாய்த்து - என்ன வேலையாகவோ
மா - மான்
வினவுவார் போல - இந்தப் பக்கம் வந்ததா என்று கேட்பது போல
வந்தவர் - வந்தவன்
நம்மாட்டு -நம்மிடம்
தாம் வினவலுற்றது - அவன் கேட்க நினைத்தது
ஒன்று உண்டு - வேறு ஒன்று உண்டு
Comments
Post a Comment
Your feedback