Skip to main content

ராமானுஜன் - டிசம்பர் 22

 கடவுள் கொடுத்தது என்னவோ மிகக்குறைந்த ஆயுளும் வறுமையும் தான். சாதிப்பதற்கு நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் ஒரு பொருட்டல்ல என்பதை உணர்த்திய வாழ்க்கை அது. 

அது 1887 டிசம்பர் 22.

ஈரோட்டில் ஒரு ஏழை அந்தணர் குடும்பத்தில்  குழந்தை ராமானுஜன்  பிறந்த நாள்.

அவருடைய தந்தையார் ஒரு துணிக்கடையில்   கணக்கு எழுதும் வேலை செய்து வந்தார்.

அவர் குடும்பம் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தது. படித்தது வளர்ந்தது எல்லாம் கும்பகோணத்தில் தான்.

7 வயதில் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

அந்த வயதிலேயே கணக்கில் ஏதாவது சூத்திரத்தை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும்  வழக்கம் அவருக்கு இருந்தது.

பன்னிரண்டாம் வயதில் தானே தன்னுடைய பாடத்திட்டத்தில் இல்லாத கணிதப் புத்தகங்களைப் படிக்கும் அளவுக்கு தன்னை உயர்த்திக் கொண்டார்.

அப்படி அவர் படித்த ஒரு புத்தகம் Loney's  Plane Trigonometry.

 ஆசிரியர் உதவியில்லாமலேயே Sum & Products of Infinite Sequence பற்றி வகுப்பெடுக்கும் அளவுக்கு அதைப் புரிந்து கொண்டார்.

பதினைந்தாம் வயதில் அவருக்கு இரவலாக ஒரு கணிதப் புத்தகம் கிடைத்தது. 

அது, Synopsis of Elementary Results in Pure Mathematics by G.S.Carr, Cambridge University.

அந்தப் புத்தகத்தில் இருந்த பெரும்பாலான தேற்றங்களைக் கற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் புரிந்து கொண்டார்.

இந்த இரண்டு நூல்களில் அவர் கற்றுக்கொண்ட விஷயங்கள் தான் அவருடைய அபாரமான கணித அறிவுக்கு அடிப்படையாக அமைந்தன.

அது 1903ஆம் ஆண்டு. அவருக்கு அப்போது 16 வயது. கணிதப் பாடத்தைத் தவிர மற்ற பாடங்களில் அவருடைய மனம் செல்லாததால் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் நடந்த கல்லூரித் தேர்வில் தோல்வியுற்றார்.

நான்கு வருடங்கள் கழித்து சென்னை கல்லூரியில் சேர்ந்தார். அங்கும் இதே நிலைதான்.

1909 இல் அவருக்கு திருமணம் நடந்தது.

வயிற்றுப் பாட்டுக்காக ஏதாவது ஒரு வேலையை தேடிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். சென்னையிலேயே ஒரு வேலை தேடினார். அவர் வேலை தேடிக் கொண்டிருந்த காலத்தில்,  அதாவது 1911இல் அவருடைய முதல் ஆய்வுக் கட்டுரை Journal of the Indian Mathematical Society புத்தகத்தில் வெளியானது.

1912இல் சென்னை துறைமுக நிறுவனத்தில் (Madras Port Trust)கிளார்க் வேலை கிடைத்தது. துறைமுக நிறுவனத்தின் பிரிட்டிஷ்  என்ஜினீயர் பிரான்சிஸ் ஸ்பிரிங் ( Francis Spring), Indian Mathematical Society அமைப்பைச் சேர்ந்த  ராமசாமி ஐயர் ஆகிய இருவருக்கும் ராமானுஜத்தின் கணித ஆர்வம் புரிந்தது.

ராமானுஜத்தின் கணித அறிவை சரியானபடி பயன்படுத்துவதற்காக அவர்கள் ராமானுஜத்தின் படைப்புகளை மூன்று பிரிட்டீஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பினர். இருவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. ஒருவரிடமிருந்து மட்டும் பதில் வந்தது. 

அவர்தான் G.H. ஹார்டி.

அது 1913 ஜனவரி 16.

ராமானுஜத்தின் கத்தை கத்தையான கணக்குத் தாள்களுடன் கூடிய கடிதம் ஹார்டியின் கையில் கிடைத்தது. முதலில் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு ஏதோ  கிறுக்கல்கள் என   நினைத்து அந்தக் காகிதக் குவியல்களை ஹார்டி அப்படியே போட்டுவிட்டார். 

இரவு உணவுக்கு பின்பு அவரது நெருங்கிய நண்பரான மற்றொரு கணித வல்லுநர் ஜான் லிட்டில் வுட் ( John E. Littlewood) ஹார்டியைப் பார்க்க வந்தார். அப்போது கத்தை கத்தையாகக் கிடந்த கணிதத் தாள்களின் மீது அவர்களின் கவனம் சென்றது. சில மணி நேரம் கழித்து இருவரும் பிரமித்துப் போனார்கள். ஏனென்றால் அந்தக் காகிதக் குவியல்களில் 120 கணிதத் தேற்றங்களும் சூத்திரங்களும் கிறுக்கல்களாக இருந்தன.

ஹார்டி உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படி கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார்.  சென்னை பல்கலைக்கழகமும்  அவருக்கு நிதியுதவி கொடுக்க முன்வந்தது.

1914-ம் வருடம் மார்ச் மாதம்

வெளிநாடு செல்ல வேண்டாம் எனக்கூறிய தாயின் எதிர்ப்பையும் சமாதானம் செய்து இங்கிலாந்துக்கு கப்பலேறினார் ராமானுஜன்.

அடுத்து ஒரு ஐந்து ஆண்டுகள் அவர் இங்கிலாந்தில் தான் இருந்தார். 

டிரினிட்டி  கல்லூரியில்(Tritiny College) ஹார்டியுடன் சேர்ந்து ராமானுஜன்  பல தேற்றங்களையும் சூத்திரங்களையும்  உருவாக்கினார்.

Arithmetic function

Riemann Series

Elliptical integrals

Hyper geometric series

Functional equations of zeta functions

Divergent series

ஆகிய பகுதிகளில் அவர் பல புதிய தேற்றங்களை உருவாக்கினார்.


சில துறைகளில் ராமானுஜத்திற்கு சுத்தமாகவே ஈடுபாடு இல்லை.

Cauchy Theorem

Double Periodic Functions

போன்ற பகுதிகளில் ராமானுஜன் ஈடுபட வேண்டும் என ஹார்டி விரும்பினார்.

1917 ஆம் ஆண்டில் தன்னுடைய 30 வயதில் F.R.S (Fellow of Royal Society)விருதையும் Fellow of Trinity College விருதையும் ஒரே நேரத்தில்  பெற்றார். 

கணித ஆராய்ச்சியில் அவருடைய புகழ் உச்ச நிலையில் இருக்கும் போது அவருடைய உடல் ஆரோக்கியம் சீர் குலைத்தது. தமிழ்நாட்டில் வெப்பச் சூழ்நிலையில் வளர்ந்த அவருக்கு இங்கிலாந்தின் சூழல் உடல்நிலையைப் பாதித்தது. 

அசைவ உணவுகளை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்டுப்பாட்டோடு காய்கறி உணவை மட்டும் உண்டு வந்த அவர் காசநோய்க்கு(Tuberculosis) ஆட்பட்டார்.

 அப்போது இங்கிலாந்திலும்  எந்த மருந்தும் கிடையாது. 

போதாக்குறைக்கு அப்போது முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் எல்லா இடத்திலும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

1919 முதல் உலகப்போர் முடிந்து உலகம் அமைதி நிலைக்குத் திரும்பியது. ஆனால் அவருடைய உடல் நலம் மிக பாதிக்கப்பட்டதால் இனி இங்கிலாந்தில் வாழ முடியாது என்ற நிலை. 

இந்தியா திரும்பினார்.

அந்தச் சூழ்நிலையிலும் அவர் தன்னுடைய நோட்டுப் புத்தகத்தில் நிரூபணம் இல்லாத தேற்றங்களைக் குறித்து வைத்துக் கொண்டிருந்தார்.

1920 ஏப்ரல் 26. தன்னுடைய 32வது வயதில் அவர் உயிர் இந்த மண்ணுலகை விட்டுப் புறப்பட்டது.

தன்னுடைய கடைசிக் காலத்தில் இருந்த நிலையில் குறித்து வைத்திருந்த தேற்றங்களை  இன்றும் உலக அளவில் கணித வல்லுனர்கள் ஆராய்ந்து  கொண்டிருக்கின்றனர்.

 அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக (University of Illinois) கணித மேதை Bruce C. Berndt ராமானுஜத்தின் படைப்புகளை நிரூபணங்களோடு தொகுக்கும் பணியைச் செய்து வருகிறார்.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...