Skip to main content

12 Tamil இலக்கணத் தேர்ச்சி கொள்


இலக்கணத் தேர்ச்சி கொள்

1).தமிழில் திணைப்பாகுபாடு ______ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

a.      பொருட்குறிப்பு

b.     சொற்குறிப்பு

c.      தொடர்க்குறிப்பு

d.     எழுத்துக்குறிப்பு

விடை :பொருட்குறிப்பு

2) “உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே
    
அஃறிணை என்மனார் அவரல பிறவே” – இந்நூற்பா இடம் பெற்ற இலக்கண நூல் ______

a.      நன்னூல்

b.     அகத்தியம்

c.      தொல்காப்பியம்

d.     இலக்கணவிளக்கம்

விடை :தொல்காப்பியம்

3) யார்எதுஆகிய  வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்துஉணர்த்தும் திணைகள் முறையே 

a.      அஃறிணைஉயர்திணை

b.     உயர்திணைஅஃறிணை

c.      விரவுத்திணைஅஃறிணை

d.     விரவுத்திணைஉயர்திணை

விடை :உயர்திணைஅஃறிணை

4) பொருத்தி விடை தேர்க.

அவன்அவள்அவர்                      1) உளப்படுத்தாத்தன்மைப்பன்மை

நாங்கள்முயற்சிசெய்வோம்  2) உளப்பாட்டுத்தன்மைப்பன்மை

நாம்முயற்சிசெய்வோம்           3) தன்மைப்பன்மைப்பெயர்கள்

நாங்கள்நாம்                               4) பதிலிடுபெயர்கள்

a.      4, 1, 2, 3

b.     2, 3, 4, 1

c.      3, 4, 1, 2

d.     4, 3, 1, 2

விடை : 4, 1, 2, 3

5) மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை?

திணைபால்எண்இடம்

6) உயர்திணைப் பன்மைப் பெயர்கள்பன்மை விகுதி பெற்று வருமாறு இரண்டு தொடர்களை எழுதுக.

·         நீங்கள் எங்கள் வீட்டிற்கு வாருங்கள்.

·         அவர்கள் ஆலயம் வந்தார்கள்.

 

UNIT 3

1. பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க.

i.      தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்.

ii.     தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்

iii.      நிறுத்தக் குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்

iv.     வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்

விடை :  நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்

2. வல்லினம் மிகும்மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக.

பாலை பாடினான்      1) தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்.

பாலைப் பாடினான்  2) தேரினைப் பார்த்தான்

தேரை பார்த்தான்      3) பாலினைப் பாடினான்

தேரைப் பார்த்தான்    4) பாலைத்திணை பாடினான்

a.      4, 1, 3, 2

b.     2, 3, 1, 4

c.      4, 3, 1, 2

d.     2, 4, 1, 3

விடை : 4, 3, 1, 2

3. வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க.

மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.

*அறிவியல் மாணவர்கள் வரிசையில் நின்று கண்காட்சியைக் கண்டனர்.

4. கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்களை அமைக்க.

முன்

அவன் முன் வந்து கூறினான்

அவன் முன்வந்து கூறினான்

தானே

அவன் தானே செய்தான்

அவன் தானேசெய்தான்

கொண்டு

த்தி  கொண்டு வந்தான்

த்தி  கொண்டுவந்தான்

விட்டான்

அண்ணன் அடித்து விட்டான்

அண்ணன் அடித்துவிட்டான்

5. காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக.

எழுதும் போது காற்புள்ளியிடாமல் எழுதினாலோ இடம்மாற்றிக் காற்புள்ளி இட்டாலோ தொடரில் உள்ள சொற்கள் அத்தொடருக்குரிய முழுமையான பொருளைத் தராமல் வேறு பொருளைத் தந்துவிடும்.

சான்று

அவள்அக்காள் வீட்டிற்குச் சென்றாள் – 

அவள் அக்காள்வீட்டிற்குச்சென்றாள்.

6. சலசலவந்து வந்துகலகலவிம்மி விம்மிஇவற்றில் இரட்டைக்கிளவித் தொடர்களை எழுதிஅவற்றை எழுதும் முறையைக் கூறுக.

இரட்டைக்கிளவித் தொடர்கள் – சலசலகலகல

இரட்டைக்கிளவிச் சொற்களை சேர்த்து எழுத வேண்டும்

 

தவறானமுறை

சரியானமுறை

நீர் சல சல வென ஓடியது

நீர் சலசலவென ஓடியது

கல கல வெனச் சிரித்தாள்

கலகலவெனச் சிரித்தாள்

7. திருவளர்ச்செல்வன்திருவளர்செல்வன் – இவற்றில் சரியான தொடர்எதுஅதற்கான இலக்கண விதி யாது?

*திருவளர்செல்வன்” என்பதே சரியான தொடராகும்

*  திருவளர்செல்வன்” என்பது வினைத்தொகை.

*வினைத்தொகையில் சொல்லுக்கிடையே  வல்லினம் மிகக்கூடாது என்ற இலக்கண விதியின்படி திருவளர்செல்வன் என்பதே சரியான தொடராகும்.

 UNIT 4

1. பொருத்தமான சீரினை எழுதுக.

அன்பே _____________ (ஆர்வமாய் / தகளியாய்)

விடை : தகளியாய்

வான்மழை ____________ (தூறலில் / பொழிந்திடின்)

விடை : தூறலில்

கண்ணிரண்டும் _____________ (இலாதார் / இல்லார்)

விடை : இல்லார்

வெண்ணிலவு ___________ (காய்கிறது / ஒளிர்கிறது)

விடை : காய்கிறது

வெய்யோன் ______________ (காய்ந்திட / ஒளிர்ந்திட)

விடை : காய்ந்திட

2. மூன்றாவது சீர் அமைத்து எழுதுக.

கல்வி கரையில ____________

விடை : கற்பவர்

கல்லாரே ஆயினும் __________

விடை : கேட்க (கற்க)

நல்லவை செய்யின் ___________

விடை : நலமே

அவமதிப்பும்ஆன்ற ____________

விடை : பொருள்

உண்ணாது நோற்பார் ___________

விடை : சான்றோர்

3. பொருத்துக.

மாச்சீர்

1) கருவிளம்கூவிளம்

காய்ச்சீர்

2) நாள்மலர்

விளச்சீர்

3) தேமாங்காய்புளிமாங்காய்

ஓரசைச்சீர்

4) தேமாபுளிமா

a.      1,2,4,3

b.     4,3,1,2

c.      2,3,1,4

d.     3,4,2,1

விடை : 4,3,1,2

4. ஈற்றுச்சீராகக் கொண்டு குறள் வெண்பா / நேரிசை வெண்பா / இன்னிசை வெண்பாஎழுதுக

கடல்

அலையென எழுந்து ஒலியெழுப்பி
ஆர்பரிக்கும் பெருங்கடல்.

வாள்

ஒளிவீசிக் கூர்மையொரு எதிரியை வீழ்த்த
பளிச்சிடும் வேந்தன் வாள்.

மழை

வானின்று பொழிந்து மண்ணைவள மாக்கும்
தேன்சுவை அன்ன தமிழ்.

தேன்

மணம்தரும் பூவில் சுவைதரும் இனிய
அமுத மெனும் தேன்.

மரம்

இயற்கைத் தாய் உவந்து அளித்த
மறக்க வொண்ணா மரம்.

5. வெண்பாவிற்குரிய தளைகள் யாவை?

இயற்சீர் வெண்டளையும்வெண்சீர் வெண்டளையும் வெண்பாவிற்குரிய தளைகள் ஆகும்.

6. ஒரு விகற்பம்பல விகற்பம் என்றால் என்ன?

வெண்பாவில் நான்கடிகளும் ஓரெதுகையே  பெற்றுவருவது ஒரு விகற்பம் ஆகும்.

வெண்பாவில் முதல் இரண்டில் ஓரெதுகையும்அடுத்த இரண்டில் ஓரெதுகையும் பெற்றுவருவது பல விகற்பம் ஆகும்.

UNIT 5

1) படிமம் என்பதன் பொருள்

i.      சொல்

ii.     செயல்

iii.   காட்சி

iv.     ஒலி

விடை :காட்சி

2) காலை இளம்வெயில் நன்றாக மேயதும்பறுத்துத் துள்ளி வரும் புதுவெயில்’ இக்கவிதையில் _________ பயின்றுவந்துள்ளது.

i.      பயன்படிமம்

ii.     வினைப்படிமம்

iii.      மெய்ப்படிமம்

iv.     உருப்படிமம்

விடை :வினைப்படிமம்

3) கூற்று :  உவமை உருவகம் போலப் படிமமும் வினை,  பயன்மெய்உரு ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்.
காரணம் : எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்குவதில்லை.

i.      கூற்று சரிகாரணம் தவறு

ii.     கூற்று தவறுகாரணம் சரி

iii.      கூற்றும் சரிகாரணமும் சரி

iv.     கூற்றும் தவறுகாரணமும் தவறு

விடை :கூற்று சரிகாரணம் தவறு

4) மெய்ப் படிமத்துக்குரிய பாடலைத் தேர்வு செய்க

i.      நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந்தாங்கு

ii.     கட்டில் நிணக்கும் இழிசினன் கையது

iii.      பாசிமணிக் கண்ணும் சிவப்புக்கோட்டுக் கழுத்தும்

iv.     வெந்தாறு பொன்னின் அந்திபூப்ப

விடை :பாசிமணிக்கண்ணும் சிவப்புக்கோட்டுக் கழுத்தும்

5) மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது“ –இதில் எவ்வகைப் படிமம் வெளிப்படுகிறது?

  இப்பாடலடிகளில் மெய்ப் (வடிவப்படிமம் வெளிப்படுகிறது.

 மாந்தோப்பு பருவ காலத்தின் அழகுப் பட்டையாக மரத்தைப் போர்த்தியிருப்பது  பூக்களும் தளிர்களும். பட்டாடையை உடுத்திய பெண்ணின் தோற்றம் பூத்திருக்கும் மரத்தின் தோற்றத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது.

 

UNIT 6:

1.ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்

i.      சிவஞானமுனிவர்

ii.     மயிலைநாதர்

iii.   ஆறுமுகநாவலர்

iv.     இளம்பூரணர்

விடை :மயிலைநாதர்

2. கூற்று1 : காப்பியம் என்னும் சொல்காப்பு + இயம் எனப்பிரிந்து மரபைக்காப்பதுஇயம்புவதுவெளிப்படுத்துவதுமொழியைச் சிதையாமல் காப்பது என்றெல்லாம் பொருள் தருகிறது.
கூற்று 2 : ஐப்பெருங்காப்பியங்களுள் ஒன்று நீலகேசி

i.      கூற்று 1 சரிகூற்று 2 தவறு

ii.     கூற்று 2 சரிகூற்று 1 தவறு

iii.      இரண்டும் சரி

iv.     இரண்டும் தவறு

விடை :கூற்று 1 சரிகூற்று 2 தவறு

3. சரியானவற்றைப் பொருத்தித் தேர்க:

காதை  1) கந்தபுராணம்

சருக்கம் 2) சீவகசிந்தாமணி

இலம்பகம் 3) சூளாமணி

படலம் 4) சிலப்பதிகாரம்

a.      4, 3, 2, 1

b.     3, 4, 1, 2

c.      3, 4, 2, 1

d.     4, 3, 1, 2

விடை : 4, 3, 2, 1

4. தவறான இணையைத் தேர்க

பாவகை -இலக்கியம்

விருத்தப்பா -1) நாலடியார்

ஆசிரியப்பா-2) அகநானூறு

கலிவெண்பா-3) தூது

குறள்வெண்பா-4) திருக்குறள்

விடை :

 

5. காப்பியம் எத்தனை வகைப்படும்அவையாவை?

காப்பியம் இருவகைப்படும்அவை

ஐம்பெருங்காப்பியம்

சிலப்பதிகாரம்மணிமேகலைசீவகசிந்தாமணிகுண்டலகேசி,  வளையாபதி

ஐஞ்சிறுகாப்பியம்

நீலகேசிசூளாமணிஉதயணகுமாரகாவியம்யசோதரகாவியம்நாககுமார காவியம்

6. காப்பியத்தைக் குறிக்கும் பிறபெயர்கள் யாவை?

இதிகாசம்புராணம்இலக்கியம்சரிதம்காவியம் ஆகியன காப்பியத்தின் வேறு பெயர்கள்

7. காப்பியச் சிற்றுறுப்புகள் சிலவற்றை எழுதுக.

காதைசருக்கம்இலம்பகம்படலம் முதலானவை காப்பியச் சிற்றுறுப்புகளாகும்.

8. பாவிகம் – விளக்குக.

காப்பியத்தின் பண்பாகப் ‘பாவிகம்’ என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது.

காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்தினையே பாவிகம்என்பர்.

சான்று :-

பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப” என்பது கம்பராமாயணத்தின் பாவிகம்.

UNIT 7 

1) பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தா ஒன்றைத் தேர்க.

i.      கர்ணன் தோற்றான் போ.

ii.     வயதில் சிறியவள்ஆனாலும் தலைவி!

iii.   இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு.

iv.    இந்தா போறான் தருமன்.

விடை: வயதில் சிறியவள்ஆனாலும் தலைவி!

2) தொன்மம் பற்றிய கூற்றுகளுள் தவறான ஒன்றைத் தேர்க.

i.      உருவாக்கப்பட்டுஇறுகிவிட்டவடிவங்கள்.

ii.     பழங்கதையைக்கொண்டுகருத்தைவிளக்குவது.

iii.      நம்பமுடியாததுபோல்தோன்றும்நிகழ்ச்சிகள்செய்திகள்.

iv.     விளங்காதகருத்துகளைப்பழமொழியின்மூலம்விளக்குவது.

விடை:;விளங்காதகருத்துகளைப்பழமொழியின்மூலம்விளக்குவது.

3) சாபவிமோசனம்’, அகலிகை’ கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்

i.      குஅழகிரிசாமி

ii.     புதுமைப்பித்தன்

iii.      ஜெயமோகன்

iv.     எஸ்இராமகிருஷ்ணன்

விடை ;புதுமைப்பித்தன்

4) பண்புக்குறியீடுகளைக்கதைமாந்தர்களோடுபொருத்துக.

அறம் 1) கர்ணன்

வலிமை 2) மனுநீதிச்சோழன்

நீதி   3)பீமன்

வள்ளல்  4) தருமன்

i..      3, 2, 1, 4

ii.     4, 3, 2, 1

iii.      2, 4, 3, 1

iv.     4, 3, 1, 2

விடை : 4, 3, 2, 1

5) தொன்மம் – விளக்கம் தருக.

* சமய நம்பிக்கைகளையும்சடங்குகளையும் வெளிப்படுத்துகின்றன.

* உவமைக் கதைகளாகவும்மெய்யியல் உருவகங்களாகவும் நின்று சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றன.

* அறிவியல் முறையில் ஆய்வு செய்யவோ புரிந்து கொள்ளவோ முடியாது.

* சமுதாயத்தின் ஆழ்மனத்திலிருந்து வெளிப்படுவனவாக அவற்றினால் ஏற்படும் கட்டமைப்பின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன.

6) பேச்சுவழக்கில் தொன்மம் வெளிப்படும் இரு தொடர்களை எழுதுக.

* நம் அன்றாடப் பேச்சில் மரபுத் தொடர்களாகத் தொன்மங்கள் கலந்துள்ளன.

 

 கிழிந்த கோட்டைத் தாண்ட மாட்டான்” – என்பது இராமாயணத்தில் பர்ணசாலையைவிட்டு சீதை வெளியே வந்தால் தீங்கு வரும் என்பதற்காக இலக்குவன் கோடு கிழித்த நிகழ்விலிருந்து உருவான மரபுத்தொடர்.

 

மனுநீதிச்சோழன்” –தன் தேர்ச் சக்கரத்தில் இறந்த கன்றுக்காக தன் மகனைத் தேர் ஏற்றிக் கொன்ற சோழன் நீதி தவறாத ஆட்சி.

7) உன் மனம் ஒரு பாற்கடல்
    
அதைக் கடைந்தால்
    
அமுதம் மட்டுமல்ல
    
ஆலகாலமும் வெளிப்படும் என்பதை
    
நீ அறிவாய் அல்லவா? – இக் கவிதையில் வெளிப்படும் தொன்மம் யாது?

 

·    இப்பாடலில் பாற்கடல்அமுதம்ஆலகாலம் ஆகிய தொன்மங்கள் வெளிப்படுகின்றன.

UNIT 8

1.குறியீடுகளைப் பொருத்துக

பெண் 1) சமாதானம்

புறா    2) வீரம்

தராசு  3) விளக்கு

சிங்கம் 4) நீதி

i.      2, 4, 1, 3

ii.     2, 4, 3, 1

iii.      3, 1, 4, 2

iv.     3, 1, 2, 4

விடை : 3, 1, 4, 2

2) கூற்று : 19 ஆம்நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது.
காரணம் : பொதலேர்ரைம்போவெர்லேன்மல்லார்மே முதலானவர்கள் குறியீட்டியத்தை வளர்த்தார்கள்.

i.      கூற்றுசரிகாரணம்தவறு

ii.     கூற்றுசரிகாரணம்சரி

iii.      கூற்றுதவறுகாரணம்தவறு

iv.     கூற்றுதவறுகாரணம்சரி

விடை :கூற்றுசரிகாரணம்சரி

3. சங்க இலக்கியத்தில்அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள்

i.      உவமை

ii.     உவமேயம்

iii.      உத்தி

iv.     உள்ளுறைஉவமை

விடை :உள்ளுறைஉவமை

4) திட்டம்’ என்னும் தலைப்பில் ‘வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக?’ என்று எழுதப்பட்டுள்ள கவிதையில் ‘வரம்’ எதற்குக் குறியீடாகிறது?

i.      அமுதசுரபி

ii.     ஆதிரைப்பருக்கை

iii.      திட்டம்

iv.     பயனற்றவிளைவு

விடை :திட்டம்

5. மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது?

i.      குறியீடு

ii.     படிமம்

iii.      அங்கதம்

iv.     தொன்மம்

விடை :குறியீடு

குறுவினா

1. குறியீட்டுஉத்தியில்ஒருபுதுக்கவிதைஎழுதுக.

எதிரே
தலைமயிர்தரித்து
கொலுவீற்றிருந்தாள்
உன்நிழல்

(பிரமிள்)

2. வியர்வை கவிதையில் வெளிப்படும் குறியீடுகளைக் குறிப்பிடுக.

  வியர்வைக்கு – ஆதிரைப்பருக்கை

 செழிப்புக்கு – அமுதசுரபி

3. குறியீட்டு உத்தியின் அடிப்படை இலக்கணங்களை எழுதுக.

  *குறிப்பாக உணர்த்தும் பொருள் (அ) சொல் குறியீட்டு உத்தி என்பர்.

*சுட்டிய பொருளுக்கும் குறியீட்டுப் பொருளுக்கும் ஏதேனும் ஒரு  தொடர்பு இருத்தல் வேண்டும்.

*சுட்டும் பொருள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டும்.

  *இத்தொடர்பின் வாயிலாகக் குறியீட்டுப் பொருள் நுண்ணிய முறையில் வெளிப்படுத்த வேண்டும்.

எகாதராசு – நீதி

பலவுள்தெரிக

1. Symbol (சிம்பல்என்பதன் பொருள்

i..      பிரித்தல்

ii.     காட்டல்

iii.      ஒன்றுசேர்

iv.     விட்டுவிலகு

விடை :ஒன்றுசேர்

2. தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று குறிப்பிட்டவர்.

i.      ஹார்ட்

ii.     ஜார்ஜ்

iii.      பிரவுன்லி

iv.     வில்லியம்

விடை :ஒன்றுசேர்

3. சங்க இலக்கியப் பாடல்களில் வரும் உள்ளுறை உவமம் என்னும் இலக்கிய உத்தியை இக்காலத்தில் ……………. எனலாம்.

i.      புதுக்கவிதை

ii.     தொன்மம்

iii.      படிமம்

iv.     குறியீடு

விடை :குறியீடு

குறுவினா

1. படிமம் என்றால் என்ன?

விளக்க வந்த ஒரு காட்சியையோகருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்திபடிமம்.

2. குறியீடுகுறியீட்டியம் சான்றுடன் விளக்குக

·         இரண்டுபொருள்களுக்கிடையேஉறவுஇருக்கும்.

·         உருவஒற்றுமைஇருக்கலாம்.

·         அருவமானபண்புஒற்றுமைஇருக்கலாம்.

சான்று

பெண்ணை – விளக்கு என்பர்குறியீட்டால் பொருளை உணர்த்துவது குறியீட்டியம் என்பர்.

3. குறியீட்டியம் கோட்பாட்டை வளர்த்தவர்கள் யாவர்

பெதலேர்ரைம்போவெர்லேன்மல்லார்மே

4. படிமம் எதன் அடிப்படையில் தோனறும்?

உவமைஉருவகம் போலப் படிமமும் வினைபயன்மெய் (வடிவம்), உரு (நிறம்ஆகியவற்றின்அடிப்படையில் தோன்றும் என்பர்.

5. கபிலரின் கலித்தொகை பாடல்வழி குறியீட்டு உத்தியை விளக்குக

வேங்கை மரம் பூத்திருக்கிறது.

அது புலி போல் தோற்றமளிக்கிறது.

சினம் கொண்ட மதயானை அடிமரத்தை தந்தத்தால் குத்தியது.

ஆழப் பதிந்த தந்தத்தை எடுக்க முடியாமல் முழங்கியது.

இப்படி யானை முழங்கும் நாட்டை உடையவன்இப்பாடலில் யானை தலைவனுக்குக் குறியீடாக இடம் பெறுகிறது.

6. குறியீடு என்பது ஒரு புதிய வடிவம் அன்று – விளக்குக

*சங்க இலக்கியப் பாடல்களில் வரும் உள்ளுறை உவமம் என்றும் இலக்கிய உத்தி தான் குறியீடு.

*உள்ளுறை உவமம் அக இலக்கியங்களில் உரைக்க முடியாத, மறைக்க வேண்டுபவைஅதனால் குறிப்பாக உணர்த்தப்பயன்பட்டது.

*குறியீடு என்பது அகம்புறம் என எல்லா வகைக் கவிதையிலும் குறிப்பாக உணர்த்தப் பயனப்டும் இலக்கிய உத்தியாகும்.

7. வியர்வை கவிதையின் மூலம் நாம் அறியும் குறியீட்டுச் செய்தி யாது?

  ஆதிரையிட்ட பருக்கையினால் அமுத  சுரபி பாத்திரத்தில் உணவு வளர்வது போல உழைப்பால் உலகம் செழித்து வளர்கிறது.

*வியர்வைக்கு – பருக்கை

*செழிப்புக்கு – அமுதசுரபி குறியீடாக அமைகிறது.

8. திட்டம் கவிதையின் மூலம் நாம் அறியும் குறியீட்டுச் செய்தி யாது?

* திட்டங்கள் தீட்டினாலும் அவை நாட்டு நலனுக்குப் பயன்படாமல் எதிராகப் போய்விடுகிறது.

*வரம் – திட்டத்திற்கும்

* சாபம் – பயனற்ற விளைவுக்கும் குறியீடாக அமைகிறது.

* வரங்கள்சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...