புதிதாகத் திருமணமான ஒரு பெண் கணவனுக்கு உணவு பரிமாறுகிறாள். அப்போதுதான் சமையல் கற்றுக் கொண்டிருக்கிறாள். வைத்த புளிக் குழம்பை கணவன் உண்பதைப் பார்த்து இன்புறுகிறாள். இப்படி ஒரு பாடல் பழந்தமிழ் இலக்கியமான குறுந்தொகையில் உள்ளது. அது முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் எனத்தொடங்கும். அப்படி உண்ட ஒரு கணவனின் அனுபவத்தைக் கூறும் கண்ணதாசனின்வரிகள் இவை.
பொன்னம்மா சமையல் என்றால்
பூமியெல்லாம் வாசம் வரும்.
தக்காளிப் பச்சடியும்
சாம்பாரும் காய்கறியும்
கொத்து மல்லிச் சட்டினியும்
கோவைக்காய் பொரியமாய்
அள்ளி அள்ளி வைத்து எனை
அருகிருந்து பார்த்திருப்பாள்!
உண்ணவொரு கையெடுத்தா
உள் நாக்கில் நீர் வடியும்
கத்தரிக்காய் கூட்டு வச்சா
கடவுளுக்கே பசி எடுக்கும்
வெண்டைக்காய் பச்சடியும்
வெள்ளரிக்காய் தக்காளி
கிண்டி விட்ட கீரைக்கும்
கீழிறங்கும் தெய்வமெல்லாம்
அப்படிக்குச் சமைப்பாளே!
அள்ளி அள்ளி வைப்பாளே!
அடுப்படிக்கு நான் போக
அவசியமே இல்லாமே
உட்கார்ந்த பாய் வரைக்கும்
ஓடி வந்து வைப்பாளே!
- கண்ணதாசன்.
Comments
Post a Comment
Your feedback